பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ல் ர்ர். 145 ருந்து ஜ்வாலை உஸ் உஸ்ஸென்று மூச்சாக எகிப்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ‘நாயுடுவாள், உங்களுக்குப் பிள்ளை வீட்டாரிட மிருந்து ரிஜிஸ்த்தர் வந்திருக்கிறது.' அப்பாவுக்குப் பயத்தில் குரல் கம்மிற்று, 'பிரியுங்க." 'அதெப்படி-கான்- அப்பா தயங்கினார். 'பரவாயில்லே, பிரியுங்க. கணக்கப்புள்ளே படிச்சுக் காட்டறத்துக்கு நீங்க மேலில்லையா? இனிமேமேல் என்ன, கீழ் என்ன? சாணித் தண்ணியிலே தெளிவு என்ன? வண் டல் என்ன? கடிதத்தில் சுற்றி வளைத்தது போக சாராம்சம்:நீங்க உங்க மகளின் கெலமையே மறைச்சு வெச்சு எங்க தலையில கட்டப்பார்த்த மோசடி முயற்சியில் எங்க குடும்பத்துக்கு வந்திருக்கும் மான கஷ்டத்துக்கு ஒண்ணரை லச்சம் பிள்ளையின் தகப்பனார் தன் கைப்பட அவருக்கு கை வந்த பாசையில் எளுதியிருக்காராம். - பின்னால் வக்கீல் கோட்டீஸ் வருமோ என்னவோ? கேஸ் இருக்குதா இல்லியா, திரிச்சவரைக்கும் கயிறுமுன்னால் பைலட் விட்டுப் பார்க்கிறார். எதாச்சும் தகைஞ்சால் பிஸினெஸில் போட்டுக்குவாரா? வீடு கட்டி வாடிக்கைக்கு விடுவாரா? ஆனால் யார்? கையில் அரிவாளுடன் நாயுடு தெரு தெருவாய்த் தேடி அலைகிறார். ஊரில் அபிராமிக்கு ஒத்த வயது காளைகள் அத்தனைபேர் தலைகளையும் சீவுவதற்குத் தாயாராக இருக்கிறார். முதலில் தண்டனை. பின்னால் விசாரணைதேவையானால் பார்த்துக்கலாம். பா,-10