பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 அபிராமி ஆனால் இது புலன் அவ்வளவு சுலபமா? கடைசி வரை கிடைக்கவில்லை-கிடைக்கவே இல்லை. ஒரு சமயம் பிற்பகல் மூன்று மணி இருக்கும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் ரோட்டில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டோம். நாயுடுவின் காங்கை அடிக்கும் கண்களின் வசியத்தில் எனக்கு கடை தடைப்பட்டு கால்கள் கின்று விட்டன. மெளனமாக, எதிருக்கெதிர், நாங்கள் கின்ற சிலை எப்படி நேர்ந்தது? எங்கேரம் நீடித்தது? தெரியவில்லை. எனக்குக் குலை கடுங்கிற்று. ஒரு ஈ காக்கை இல்லை. வெயில் முதுகைப் பட்டை உரித்தது. அவர் கையில் கத்தி யில்லை. ஆனால் அவர் கையினாலேயே தீக்குச்சியாக ஒடித்து அங்கே பாலத்தடியில் தாக்கி எறிய அவருக்கு நான் எம்மாத்திரம்? என்னைப் படிப்படியாகத் தன் ஆலிங்கனத்தில் இறுக்கிக் கொண்டிருக்கும் அந்தப் பார்வையின் வசியத்தி னின்று, உயிர் முயற்சியில் ஒருவாறு என்னை உதறிக் கொண்டு, காலை அதில் கட்டிய கல்லோடு இழுத்துக் கொண்டு அவரைக் கடந்தேன். நான் பத்திரமாகிவிட்ட தூரத்துக்கு வந்து விட்டேன் என்று எனக்கு கிச்சயமான தானதும் திரும்பிப் பார்த்தேன். கின்றவிடத்திலேயே சின்றபடி, நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவளுடைய அந்தப் பார்வைஆ! ஆனால் எனும் சொல் சமீபத்தில் இங்கு சிறைய நடமாடுகிறது. ஒருவேளை அதுதான் ராக்அபிராமி'யின் ஜீவஸ் வரமோ? அந்தப் பார்வை