பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லt , சி. ரா. மானாலும் ஆகட்டும்; நான் இறங்கப் போறதில்லை. இந்த வீட்டில் இது வரைக்கும் நான் போடறபோதே, ஆறவெச்ச காப்பி நான் குடிச்சதில்லையாக்கும். இன்னிக்குன்னு நாட்டுப் பெண் மேலே அலாதி அக்குசு வந்திருக்காக்கும்! கத்துங்கோ, கத்துங்கே கன்னாக் கத்துங்கோ. இனி என்ன பயம் பயந்து பயந்து செத்ததுக்கெல்லாம் பலனை அனுபவிச் சாச்சு. இனிமே பயப்படாமே போற ஆபத்தில் போனாப் போறேன்- பார் பார், இதோ வரார்-இந்தச் சரீரத்தைத் தாக்க முடியாமெ தாக்கிண்டு, புஸ் புஸ்ன்னு கொல்லன் பட்றைத் துருத்தி மாதிரி மூச்சு விட்டுண்டு என்னை விரட்டிண்டு வராட்டால்தான் என்ன? மார்க்கபமோ சதங்கையாய்க் குலுங்குகிறது. என் மேலே பரிவுதான்ம் என்ன தட்டுக் கெட்டுப் போச்சு? நான் கூப்பிடறேன், ே வரவில்லையா என்கிற ஹடம்தானேl-' அவசர அவசரமாய் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்கையிலேயே அறைக்கதவு படிரெனத் திறந்தது. கிலை வாசல் மேல் சாய்ந்தபடி மாமியார் கின்றார் ஏறி வந்த சிரமம் தாளவில்லை. மூச்சு இரைத்தது. பார்க்கவி எழ முயன்றாள். தள்ளிவிட்டது. வந்தது வரட்டும், நான் இருக்கறபடிதான் இருக்கப் போறேன் என்றெல்லாம் தனக்குள் வீறாப்பு எண்ண லாமே தவிர, கேரில் காண்கையில் நெஞ்சு அப்படியே சுருங்கி விடறது! ஏனோ தெரியல்லே. பார்க்கவிக்குத் தன் மேலேயே கொள்ளை ஆத்திரம் வந்தது. அம்மாவின் தோற்றத்திற்கே பிறரை வாயடைக்கும் ஒரு ப்ரஸன்னம் இருந்தது. தாண்மேல் சாய்ந்து ஒரு காலை நீட்டி உட்கார்ந்தபடி தயிரைக் கடைந்து கொண்டே, என்னடா சொல்ல வரே, மா விளக்கு மா திங்கற மாதிரி வாயைக் குதப்பிண்டு' என்று கேட்டதுதான் தாமதம், "ஒண்னு