பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 நம்பி த்யானம் என்பது என்ன? எண்ணங்களைப் போடும் அசையில், அவை ஒரே எண்ணத்தின் விழுதாகத் திரள் துவதானே! பிரிகளைத் திரித்து ஒன்றாக்கிய திருவடம். அவகாசத்தில் இந்தக் கவிதா கேரங்கள், தாமாக நினைவுக்கு வந்தோ, வரவழைத்தோ, புழுங்கிப் புழுங்கி, காதலே தியானமாகி விடுகிறது. ஆகவே அபிராமி, வயது முற்ற முற்ற அனுபவம் கண்ட உண்மை, என் காதல் உன் மேல் மட்டும் சிறை கொள்ளவில்லை. யாழ் மீட்டுகிறது. உதிரும் காதங்களில் நீ ஒன்று, நான் ஒன்று, ஒன்றொன்றாய் ஒன்றுகள், ஒன்றின் ஒன்றுமணிகள். ஜன்மாவின் ஜபமாலை. கோர்க் காமல் சிதறுண்ட மணிகள் ஒன்றொன்றாய் பொறுக்கு கிறேன். சிறியதும், பெரியதுமாக சிந்திக்கிறேன். ஒவ் வொன்றாய் உச்சரிக்கிறேன். ஒவ்வொன்றாய் நழுவி சினை வில் மூழ்கி விடுகிறது. அது அது அதனதன் படுகையில் ஜ்வலிக்கின்றது. அவை மேல் வரா. அவைகளின் ஆழம் -9. ULJ Lj.« சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறேனோ? சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும். அலுக்காத வரை. இதுவேதான் என் கீதம். உள்ளமும் உடலும் ஒன்று நெகிழ்ந்த கற்கண்டு நேரங்களை விரும்பாதவன் இல்லை. ஒருதரமேனும் ருசி காணாதவன் இல்லை. காதலுக்கு வியாக்யானம் பண்ற வயசைப்பாரு! காடு வா வாங்கறது. காதல் உயிர்ச்சாம்பல் பூ. ★ வீட்டுக் கிணற்றைச் சமீபத்தில், தார் வாரும்படி ஆகி விட்டது. சென்றுபோன மாதங்களில், கிணற்றுச் சுவரி லிருந்து உள்ளே விழுந்து விட்ட சோப்புக் கட்டிகள்,