பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


©fl • ← , ᏰᏉff . 153 ஒன்றிரண்டு துவாலைகள், வேப்பங்கிளையினின்று உதிர்ந்து உள்ளே அழுகிக் கொண்டிருக்கும் இலைகள், ராட்டின து லத்தின் மேலிருந்து பறவையினங்கள் அவ்வப் போது சிந்திய பிரசாதங்கள்...... மறுநாள் காலை, பூஜையறையில்-இருக்கிற உழக்கு அது பெட்டி அறை, படங்கள் சுவர்களில் தொங்குகின்றன. ஒரத்தில் சிறு மேடைமேல் குத்துவிளக்கு, புவனேஸ்வரி படம், பூஜாதிரவியங்கள்-நான் மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தி ரு க் கை யி ல் என்னென்னவோ பண்ணிப் பார்க்கிறேன். இமைத்திரை யில் ஒடுவது நான் கினைக்க முயல்வது அல்ல, வேறு ஏதேதோ-சாரு பரக்கப் பரக்க ஓடி வந்தாள். அவள் கண் களில் தனி ஒளி, திடீரென சாரு அழகாகி விட்டாள். "தோ பாருங்களேன்! இதோ பாருங்கோளேன்!! அவள் கைகள் நடுங்கின. குவிந்த உள்ளங்கைகளில்'கிணற்றிலிருந்து வாரிக்கொட்டிய கும்மி சேற்றை கிளறிண்டிருந்தபோது கிடைச்சது!" இன்று சோமவாரமுமதுவுமாய் கின்று கொண்டிருக்கிறார். காலடியில் வாஹனம். லக்ஷணமான முகம், அந்தக் கண்களில் தான் எப்படி உயிர் சிந்துகிறது! கிரீடத்தின் நுனியில் ஒரு இம்மி மூளி. ரொம்ப ரொம்ப இம்மி. தேடிப் பார்த்தால்தான் தெரியும். சாரு குழந்தையாகி விட்டாள். முன் வாசற்படியை ஒட்டிச் சின்னகோயில் கட்டுவதில் முனைந்துவிட்டாள். எங்கிருந்துதான் சிமிட்டியும் செங்கலும் இறங்கினவோ? என்னிடமிருந்து ஒரு பைசா பெயர வழியில்லை. தன் கையாலேயே......... அவளே கண்பட்டால் கை செய்யும் சுபாவத்தினள். ஆனால் முனைந்த காரியத்தை முடிக்கும் கையினள்