பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 கம்பி என்று சொல்லமாட்டேன். ஆரம்ப உற்சாகம் ஒடுங்குமுன் எடுத்த காரியம் முடிந்தால் அதிர்ஷ்டம். பரவாயில்லை. ப்ளானாய்த்தான் கட்டுகிறாள். இரண்டு குட்டி வாசற்படி தாண்டி, குட்டிக் கர்ப்பக்ரஹம் கிறுவன விழாவை நோக்கி வசூல் வேறு தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அவள் சைன்யம் இருக்கிறது. சந்தோஷமாய் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். "சாரு மாமிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருடி! இனிமேல் அவளுக்கென்ன குறைச்சல்.' ★ ★ ★ நடு கிசி, கலைந்துவிட்ட தாக்கம் மீள மறுத்து விட்டது. கூடத்தின் சுவரொட்டிக் கடிகாரம், பெண்டுலம் தான் அதன் ஜபமாலை நொடிகளை சொடுக்கிக் கொண்டி ருக்கிறது. யாரோ என்னை அழைக்கிறார்கள். பேரைச் சோல்லி இல்லை மோனமானதோர் விளிப்பு சைகை அல்ல. உள்ளத்தில் உத்தரவின் எதிரொலிப்பு. கட்டுப்படாத வசியத்தில், அது ஈர்க்கும் வழி செல்கிறேன். டக் டக் டக்-நொடிகள். நொடிக்கு ஒரு காமம். கோடி நாமம். காமகோடி கொடியே காமம். குறுகிய கூடத்தில், தூக்கத்தில் விதவிதமாய் மலர்க் திருக்கும் உடல்களைத் தாண்டி, பூஜை அறையுள் நுழை கிறேன். மேடை மீது, குத்து விளக்கில், சுடர் லேமுத்து. தொந்தியைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு கிற்கி றார். ஒரு கையில் தும்பிக்கையின் கனத்தை மோதகத் துடன் தாங்கிக் கொண்டிருக்கிறார். கண்கள் பளபளக் கின்றன. அவைகளில் எப்படி உயிர் சிந்துகிறது: மார்பு மிதக்கிறதா? உடல் பரபரக்கிறது. கைகள் கூம்புகின்றன,