பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 நம்பி காதலும் அப்படித்தான். என்னதான் விளக்க முயன் றாலும் யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. காதல் புரிந்து கொள்வதில்லை. ★ ★ ★ பிள்ளையாரை மீட்க, சாரு பட்டபாடு பாதாள கொலுசுக்கு விக்ரஹம் பிடிபடவில்லை. பிடிபடாது. வாளியை முங்கி முங்கிப் பார்த்தாள். அதிலே மாட்டிக் கொள்ள மாட்டாரா? பிள்ளையார் மிதந்து கொண்டா இருப்பார் இவளுக்காக? பால்க்காரப் பெருமாள் மூழ்கி எடுக்க மாட்டானா? ஆழம் இருபது அடிக்குப் பஞ்ச மில்லை. கிணற்றின் மேல் குனிந்த அவள் முகம், அவ்வப் போது நிமிர்கையில் அவள் கண்கள் என்னைக் குற்றம் சாட்டின. அவைகளில் சாபம் சிங்திற்று. எரிக்க முடிந்தால் இவள் கோவலனை எரிக்கும் கண்ணகி, ஆழத்தின் பத்திரத்திலிருந்து சிரிப்பு கேட்கிறது, என் மட்டில்தான். சாரு பிள்ளையார் மேல் காதல் கொண்டு விட்டாள். காதல் சிரிக்கிறது. காதலின் சிரிப்பு, கண்ணிர் மணிகளின் மெல்லிய கிண்கிணி. 责 演 ★ ராமனுக்கும் அனுமனுக்கும் இடை உறவு பற்றி இப்போது அடிக்கடி சிந்திக்கத் தோன்றுகிறது. சுந்தர காண்டம் படிப்பதன் விளைவு எனக்கு வேலை உருப்படி யாகக் குதிரவேண்டும். நாலு மளிகைக் கடைகளில் கணக் கெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு விறகு மண்டியின் கல்லாவில் மாலை ஒரு மணி நேரம் உட்காருகிறேன். மத்யானம் ஹைகோர்ட் கிழல் ஒதுக்கத்தில் வேறு ஒருவர் டைப்ரைட்டரில் ஜாப் வேலை செய்கிறேன். பிழைப்பு