பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


gu)ff・ ザ。『ff。 159 தான் உருவாகிறது. இன்று வேலை தேடிப்போன இடத் தில் எனக்கு நேர்ந்தது கினைப்பு வருகிறது. ராக் த்ரோக். -தூக்கி வாரிப்போட்டது. அப்படி ஒரு ராகம் இருக்கிறதா என்ன? இருக்கணுமா என்ன? இதோ உண்டாகி விட்டதே! துரோகம் இன்றைய வாழ்க்கையின் நியதியிலேயே புகுந்து விட்டது. சின்னச் சின்ன துரோகங்கள் செய்பவர் களுக்குத் தெரியும். செய்யப் பட்ட்வர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லிக்காட்ட முடியாது. புதிய தலைமுறை ஏற்படுத்தும் புதிய மதிப்புகள்-வால்யூஸ் என்று எண்ணம்(I) பெற்றோரிடத்தில் தங்கள் உண்மையான சம்பளத் தைச் சொல்லாத பிள்ளைகள்; போகும் இடம், திரும்பி வரும் நேரம் தெரிவிக்காத மக்கள்; நேரம் ஆக ஆக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாசலில் நீ உட்கார்ந்திருந்தால் உன் தலையெழுத்து. படு. நீ கொடுத்த பணத்திற்கு நீ கணக்குக் கேட்டால் உனக்குச் சொல்ல கெளரவம் பார்க்கும் தலைமுறை. செலவு கேட்டால் நான் அல்பன். பாடப்புத்தகத்திற்கு நடுவே சினிமாப் பாட்டுப் புத்தகம். இதைவிடப் பெரிய சமாச்சாரங்கள் இருக் கின்றன. வேண்டுமென்றே அவைகளை நான் இழுக்க வில்லை. சிறு சிறு அலகதியங்கள் கூப்பிட்ட குரலுக்கு பதில் குரல்- கிடையாது. என்னைப் பாம்பே கடித்திருக்கலாம். ஆனால் நான் என்ன கண்டேன்? நான் என்ன செய்ய முடியும்?"