பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 கம்பீ "கன்னாயிருக்குடா. நமக்கு காலையில் பலகாரம், மத்தியானம் சாப்பாடு பழக்கம். அவன் காலையிலேயே சாப்பிட்டிருப்பான். இப்போ அவனுக்கு மறுபடியும் பசிக்க நேரமாச்சு. அழைச்சுண்டு வா!' மாமி இப்படிச் சொல்வதால், கூடவே பசிக்கும். ஏற் கெனவே தொப்புள் குழியில் பள்ளம் பெரிசாய்த்தானிருக் கிறது. எனக்கென்று எவர்சில்வர் தட்டை அவர்கள் வீட்டில் ஒதுக்கியும் ஆச்சு. மாமி சொல்லும் வேளைப் பசியைத் தவிர ஏழைப்பசி என்று ஒன்று இருக்கிறது. எவ்வளவு கொட்டினாலும் சிறையாத குழி. கண்ட இடத்தில் கிடைத்தவரை சுருட்டு எனும் கொள்கைப் பசி. சினேகிதத்தின் சலுகையில், பூச்சில், மானங்கெட்ட பசி. அவர்கள் குடும்பம் பெரிது. கம்பிக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், இரண்டு வேலைக்காரர், சமையல்காரன், சொந்த வீடு, கிலபுலன், வீட்டுச்செலவுக்கு ஊத்துக்குழியிலிருந்து மாதம் ஒரு டின் வெண்ணெய் வர வழைத்தார்கள். டெலிவரி எடுக்க சில சமயங்கள் கான் போவேன். சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போக வர பஸ் செலவு, டி.பன்செலவுக்கு அவர்கள் கொடுத்ததை இடுப்பில் கிமிண்டிக் கொண்டு, டின்னைச் சுமந்து நடந்தே வந்து வீட்டில் சேர்ந்திருக்கிறேன். இது என் வாழ்க்கை வளம்! சித்தாப்பாவுக்குக் கல்யாணமான கையோடு புதுக் குடித்தனம். கம்பி வீட்டுக்கு எதிர் ஸ்டோரில்தான் வந்தோம். ஆம் ஆறாவது ஒட்டு விரல்போல் கான் ஒரு வேண்டாத கொசிர். பி. ஏ. கடைசி வருடம். ஏழை உப காரச் சம்பளம், தகுதி உபகாரச் சம்பளம் என்று என் எட்டாவது வகுப்பிலிருந்து தொடர்ந்து வாங்கி எப் படியோ இந்தவரை, அங்கு இங்கு என்று அயலார் கயவில் தருமத்தில் எட்டிப் பிடித்து விட்டேன்.