பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ல்ா.சி. ரா. 莎 காப்பியைக் குடிக்கறதுக்கு நானே மாடியேறிக் கூப்பிடணு மாக்கும். தவிடு திங்கறதுலே ஒய்யாரம் வேறே!' சரி, இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே, இன்னிப் பொழுது நல்ல போதாப் போகனும், இன்னிக்குத்தான்னு உடம்பு என் வசத்துலேயில்லே. - பார்க்கவி பதில் பேசவில்லை. படுக்கையைச் சுருட்டி விட்டு எழுந்து கின்றாள். மாமியார் வாயிலை அடைத்துக் கொண்டு கின்றாள். பறங்கிப்பழ மேனி. தாடைச் சதையும் கழுத்துச் சதையும் தளர்ந்து இறங்கி, பேச்சில் வாயசைகை யில் தாமும் ஆடின. சிங்கப்பிடரி போல் கூந்தல், முப்பு மஞ்சள் பூத்து மயிர்க் கால்களிலிருந்து முரடிக்கொண்டு எழுந்து ஓடிற்று. அம்மா மஞ்சள் இழந்து எத்தனையோ வருடங்கள், அவள் இந்த வீட்டுக்குள் புகுவதற்கு முன்னா லேயே- ஆகிவிட்டன. ஆனால் அவள் முகத்தில் இன்னும் லகடிமி பெருகினாள். கைராசி இன்னமும் விளங்கிக் கொண்டுதாணிருந்தது. இன்னமும் அவர் கையில் குழந்தை யைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொண்டு தானிருந்தார்கள். தன்னைக் கண்டால் தான் இப்படி. அம்மா சின்ன வயதில் ரொம்பவும் அழகாய்த்தானிருந்திருப் பார். ஆனால், பாவம், பற்கள்தாம் கிற்கவில்லை. வெறும் வாயைமென்று கொண்டிருப்பார். பார்க்கவி உடம்பை ஒடுக்கிக் கொண்டு சுவரோரமாய் நகர்ந்து வாசலைத் தாண்டினாள். அதாண்டி கேட்டேன்! பல்லைத் தேய்க்காத பவிஷோடு மேலே இடிச்சுண்டே போ! என்னா, உனக்கு இன்னும் பொழுது விடியாவிட்டாலும் வெள்ளி முளைக்கறதுக்கு முன்னாலே நான் ஸ்நானம் பண் னிட்டு நிக்கறேனே, உனக்குப் பொறுக்குமா? இந்த ஒரு வேளை சோத்தைத் தானே பொங்கித் தின்கிற மாமியார், அதையும் காறாமல் ஏன் தின்கணும்? ஊஹூம்-மண்டை வெடிச்சுடாதா? * > *