பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@}豹-伊。岛”仔。 íàÿ சித்தாப்பாவுக்குக் கட்டைச் சம்பளம். வாடகை கொடுத்து மிச்சத்தில் மூன்றுபேர் வயிறு அலம்பியாக வேண்டும். எல்லாம் அப்படி இப்படித்தான். எல்லாவற் றையும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாது. நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இருபது வருடம் வாழ்ந்தவனுமில்லை. இருபது வருடம் கெட்டவனு மில்லை என்று ஒரு வசனம் உண்டு. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், என் வாழ்க்கை எப்பவும் ஸோ-லோ, ஏன் அப்படி? இதுவே ஒரு வேடிக்கையாக இல்லை? ஆகவே எதிர்வீட்டில் கம்பி எனக்குக் கிடைத்தது என் தனி அதிர்ஷ்டம்தான். சீக்கிரம் ஸ்நேகமாகி விட்டோம். என்னைக் காட்டிலும் நாலு வயது மூத்தவன். ஆனால் இரண்டு பேரும் ஒரே வகுப்பு. அவன் கல்லூரி வேறு. அவன் படிப்பு அவனை இரண்டு மூன்று இடங்களில் சறுக்கு மரம் விளையாடிவிட்டது. காரணம்? எதைவேண் டுமானாலும் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். முக்கிய மானது பணக்கார வீட்டுப் பிள்ளை. நான் அவனுக்குப் பட்ட பாவம் அவன் தனக்குப் பட்டுக் கொண்டானோ சந்தேகம்தான். என் கம்பி. அழகு கம்பி, புத்தகங்கள் வாங்க வக்கு இல்லாத எனக்கு அவன் புத்தகங்கள் பயன் பட்டன. அங்காட்கள், எத்தகைய நாட்கள்! என் வாழ்க்கையில் கில்ட்டு எழுத்துப் பக்கங்கள். அவ்வப்பேர்து புரட்டிப் பார்க்கிறேன். பத்திரமாக மூடிக் காக்கிறேன். அடிக்கடி கினைப்பதால் செலவழிந்து போம்ோ எனும் அசட்டு எண்ணம்கூட. - சில இரவுகள், சாப்பாடு ஆனவுடன்