பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கம்பி நாங்கள் இருவரும் கடற்கரைக்குப் போய், அலை விளிம்பில் ஒரு ஒடத்தடியில் உட்கார்ந்து, அல்லது மணலில் மல்லாந்து படுத்து, அலுக்காது பேசுவோம். அல்லது மெளனமாக படுத்திருப்போம். ஆ அந்த மெளனம், பேச்சைக் காட்டிலும் என்ன வன்மையான பரிமாறல்! குளிர் சதையில் உறைக்க ஆரம்பித்ததும் எழுத்து பேசிக்கொண்டே மரினா வழியே..கடந்து, தங்க சாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன்-பூர், பாஜி, சேறாட்டம் பால், அதன் மேல் கணிசமான ஏடு. அப்படியே பேசிக் கொண்டே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு விளக்கு வெளிச் சத்தில் இரவு பகலாகி இருக்கும். மார்வாரிப் பெண்டிர், வளையல்களும், பாதங்களில் தண்டையும் கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில்-இது செளக்கார் பேட் பையா, பிருந்தாவனமா? -அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ஸ்டேஷ லுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி-இர்வின் சாலை வழி பேசிக்கொண்டே War Memorial வந்து, இரும்புப்பாலம், மீண்டும் மெரினா.கள்ளிரவு. பட்டை வீறும் கிலா. பேசிக் கொண்டே கடந்து கொண்டே, பைக்ராப்ட்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி, வந்தர்ச்சு. வீடு, என் வருகிறது? பேசுவோமோ, பேசுவோமோ, என்ன தான் பேசு வோமோ, பேசுவதற்கு என்னதான் அத்தனை இருந்ததோ, இப்போ நினைவு கூட்டலில் உருப்படியாக ஒன்று கூட நினைவு இல்லை. கெஞ்சின் மடைதிறந்து கொண்டால், வெள்ளம்தான் புரளும். வாய்க்காலா வடியும்: கம்பி, நட்பு என்பது காதல் தாண்டா, கம்முடைய அந்த வயது நிலை அப்படி அந்தப் பரிமளம் டிேத்து சிற்கக்