பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#}ff e 3° * sfff a 169 கூடியது அல்ல. அந்த லலிதம் அத்தனை நளினம், உள் ளுணர்வுக்கு அப்பவே தெரியும். கம்பி, உன்னுடைய, லேசான அலட்சியம் சிந்தும்:கண் களும், எடுப்பான காசியும், நடராஜா சிலையில் காணும் கூரிய மோவாயும், அதில் குழிவும், அலைபாயும் கேசமும்என் அழகு கம்பியை தொடப் பன்முறை எழும் ஆசையை சிரமப்பட்டுத் தான் அடக்கிக் கொள்வேன். ஃப்ராய்டு வந்தாலும் வந்தான். பிறகு எல்லாமே லெக்ஸ்தான். ஆனால், இது அது அல்ல. நம்பி சத்தியமாக இல்லை. இதுபோல் கள்ளிரவு தாண்டி கதவை யிடித்தால், சித்தப்பாவுக்கு ஏன் எரிச்சல் வராது? உனக்கென்ன, ! தனிச்சாவி வைத்திருக்கிறாய். "இந்த மாதிரி ராக்கத்து அடித்தால் பரிட்சை என்ன வாகிறது?" ஆம், மார்ச் நெருங்கிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு என் தலைவிதியில் திருப்பு முனை. இப்போது இரவு கூடி கம்பி வீட்டிலேயே தங்கல். படிக்கிற சாக்கில் உண்வும் படுக்கையும் அங்குதான். 'அம்பி, கம்பியை கவனிச்சுக்கோ'-மாமி, பாவம் அப்பாவி. கம்பி பல்லைக்கடிக்கிறான். இரவு அவ்வப்போது ஆவிபறக்க, மணம் வீச 'டி' மாடிக்கு வரும். 'டி'க்காகப் படித்தோமோ? படிப்பதற்காகக் குடித் தோமோ? ஆனால் கன்றாகத்தான் படித்தோம். நம்பிக்கு கணக்குத்தான் கால் வாரல். ஆகவே அதில் அவனைப் பலப் படுத்துவதில் இருவரும் முனைந்தோம். கடந்த வருடங் களின் வினாத்தாள்களை மீண்டும் மீண்டும் அவனைச்