பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176 ம்ேபி செய்யச் செய்தேன். அதே கணக்கே அடுத்த வருடத் தாள் களில் வருவது புதிதல்ல. அவனோடு நானும் செய்தேன். அவன் தடுக்கி விழுந்த இடங்களை, கான் செய்த வழியில் காட்டி எச்சரித்தேன். பிற சமயங்களிலும் ஆழ்ந்து படிக்க, என் காகிதங்களை அவனுக்குக் கொடுத்தேன். ஆனால் கம்பிக்கு கணக்கு மட்டும் சாபம் என்று கண்டு கொண்டேன். சில சமயங்களில் எனக்கு பொறுமை இழந்து வார்த்தை தடிக்கும். அவன் கண்களில் தணல் பொறி பறக்கும். ஆனால் சாளரத்தைச் சட்டென இழுத்து விடுவான். எப்படியும் நாலு வயது மூத்தவன்; தவிர தடம் என்ன? சொல்லிச் சொல்லி, எதிர்பார்த்து, எதிர்பார்த்து, புலி புலி, புலியும் வந்துவிட்டது. நெற்றியில் உதிரி விபூதி. உச்சி மயிருள் வீட்டும் பெரியவர்களின் அகதை, கெஞ்சில் திக்திக்-ஹாலுக்குள் துழைகிறோம். அவரவர் இடங்களைக் குறித்த எண்களை டெஸ்க்களில் தேடுகிறோம். தற்செயலாக, நம்பியின் இடம் எனக்கு அடுத்த வரிசையில் எனக்கு ரெண்டு சீட் பின் தள்ளி, பரவாயில்லை, கணக்குப் பரிட்சை கடைசி நாள்தான். மிச்சப் பாடங்களில் நம்பி அஞ்சுக்கு ரெண்டு பழு தில்லை. இதென்ன கடைசி நாள். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் அசட்டு ஆறுதல், தாக்குதண்டனையை ஒத்திப் போடுகிற மாதிரி கடைசி நாள் கதவு மூலையிலேயே ஒளிந்து கொண்டிருக்குமா? .ெ வு எளி யி ல் வரவே வராதா?