பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பார்க்கவி அவர் மேல் தன் காற்றுக்கூடப் படவில்லை என்று அவளுக்குத் தெரியும். தெரிந்து யார் பதில் சொல்றது? தர்க்கந்தான் மிஞ்சும். படிப்படியாய்ப் பார்க்கவி மாடி இறங்கினாள். பின்னாலேயே அவளை முழுங்கிவிடும் பசியோடு அம்மாவின் பார்வை அவள் முதுகைத் துளைப் பதை அவள் உணர்வாள். இந்தப்பார்வைதான் அம்மாவின் வாயைவிட எனக்குத் திகிலாயிருக்கு. என் உடம்பின் ஒரொரு அசைவையும், செய்கையையும் இவர் இப்படித் தொடர்ந்து கவனிக் கறப்போ என்னுடைய தப்புகள் மாத்திரம் என்மேல் ஈட்டிகள் மாதிரி தலை நீட்டிக்கொண்டு கிக்கறதுகள். கான் என்ன செய்வேன்? என்னிக்கு நான் வாய்விட்டு அலறிடுவேனோ உதட்டைக் கடிச்சு அந்த உளறல் கத் தலை உள்ளுக்குத் தள்ளறத்துக்குள்ளே உன் பாடு என் பாடாயிடறது. அந்த அசதி தாங்காமல் ஒவ்வொரு சமயம் சுவத்துலே சாஞ்சுடறேன். இந்த வேட்டைப் பார்வையால் எனக்கு என்னிக்குப் பைத்தியம் புடிச்சுடுமோ? இல்லாட்டா ஏற்கெனவே புடிச்சுடுத்தோ? ஆனால் எனக்குப் புடிச்சால் எனக்குத் தெரியுமோ...?' தவலையைத் தூக்கிக்கொண்டு பார்க்கவி கிணற் றடிக்குச் சென்றாள். என்னிக்குத்தான் எனக்கு விடியுமோ? இன்னிக்கு முழிச்ச வேளை சரியில்லே. எதன் முகத்துலே முழிச்சேன்? வழக்கப்படி பூ முகத்துலே முழிக்கல்லையா? பூ முகத்துலே முழிக்கணும்னு தானே தினம் ஜன்னலோரம் படுக்கையைப் போட்டுக்கறேன். பகவான் பூவைத்தான் பிடுங்கிண்டுட் டார்னா, பூ முகத்துலேகூட முழிக்கக் கூடாதுன்னு இருக்கா? ஆனால் என் மாதிரி ஆயிட்டவாளுக்கெல்லாம் நல்ல சகுனம், கெட்ட சகுனம் எல்லாம் ஏது? நாங்களே