பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ரீர். 1?3 கூடத் தெளிந்து காட்டுவது போல் தோன்றிற்று. என் பிரமையோ கடை, பாவனைகள்கூட... அந்த நீண்ட மெளனங்கள். மணமில்லாத புன்னகை யில், தாடைகளின் லேசான இளக்கம், உள்ளடக்கிய உணர்ச்சியில் முஷ்டித்துத் திறந்து மூடும் கைகள்...அப்பா, வாயைத் திறந்து கத்திவிடுங்கள் அப்பா! எங்களை இரண்டு. அடிகூட அடித்துவிடுங்கள். ரிஷிகேஷில் இமயச் சாரலுச்சியில் சூரியோதயத்தில் பசும் பொன் காட்டும் புற்றரைமேல், பாட்டியும் அவரும் கடமாட மற்றவரெல்லாம் மலையடிவாரத்தில் கின்று கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பர். அல்லது பார்த்துக்கொண்டிருத்தல் வேணும். அப்பாவின் எண்ணம் எங்களைப்பற்றிய அபிப்பிராயம் அதுதான் என்று என் கணிப்பு. காலத்தின்மேல் பழியைப் போடாமல் போக்குகள் மாறி விட்டன என்பதைப் பெரியவர்கள் எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்? ஆனால் எதையும் அப்பா காட்டிக்கொள்ள மாட்டார். நெஞ்சுக்கனம்... அப்பா! அப்பாவின் கழுத்து, நாயனக்காரன் கழுத்துப் பலம். கரம்புகள் புடைத்துக் விண்டு... ஒரு நாள் மாலை, கானும் ராஜூவும் வெளியே போய்த் திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பா எங்களை விரலைக் கொக்கி காட்டி விளித்தார். காங்கள் தற்செயலில் அவருக்கு இருபக்கத்திலும் கின்றோம். அப்பா, எங்கள் தோளில் கை போட்டுத் தாங்கிக்கொண்டு எழுந்தார். அம்மாடி! கைலாய மலைக்கடியில் ராவணன் நசுங்கிப்போனானாமே! அண்ணனும் தம்பியும் நசுங்கி னோமோ இல்லையோ, ஏதோ ஒரு தினுசில் குன்றிப்