பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காலம் போனோம். அப்படி எங்களை அழுத்தியது அப்பாவின் வெறும் உடல் வலிமை மட்டும் அல்ல; அப்பா தோள்களில் ரத்தம் சுண்ட ஆரம்பித்துவிட்டது. வயது! இந்தச் சைகை எச்சரிக்கையா? ஆசீர்வாதமா? இது என் வயதின் அதிகாரம். எச்சரிக்கை, ஆனால் நீங்கள் என் விழுதுகள்; ஆசி. - அப்பா வாய் திறந்து பேசாவிட்டால் என்ன? அவ ருடைய பேசாத வார்த்தைகள் எங்கள் கெஞ்சில் பிம்பம் அடிக்கின்றனவே! எங்கே போயிருந்தாய்? எங்கே போனாலும் நேரத்தில் என் கூட்டுள் அடங்க வில்லை? . இருப்பது ஐந்து பேர். ஆனால் பந்தி எட்டு. உங்கள் அம்மாவை என்னவென்று கினைத்துக்கொண் டிருக்கிறீர்கள்? அவள் உங்கள் சமையல்காரியா வண்ணாத்தியா? டி.வி. உடம்புக்குக் கெடுதல்: குணத்துக்கும் கேடு. வாரத்துக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி, இரண்டு சினிமாவுக்கு ஈடில்லையா? இது, நீங்கள் உருப்படுவதற்கு அடை யாளமா? தன் காரியங்களைத் தானே கவனித்துக்கொள்வது தான் சுயகெளரவம்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. வாழ்வு மானத்தோடு மணக்க இதைவிட அழகிய சூத்திரம் இல்லை. -அத்தனையும் எங்களுக்கு ஒவ்வாத வார்த்தைகள், நாங்கள் என் செய்வோம்?