பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f8? இாலம் கடவுள் இருக்கிறாரோ இல்லையோசைத்தான் ரிச்சய மாக இருக்கிறது. அவனுடைய ஆட்சி பூரணமாக எங்களி டம்தெரிகிறதே! துலம் முறிந்து - அாலத்தை நான் கவனித்திருக்க முடியும், கவனித் திருக்கவேண்டும். ரூ. 550? என் பஞ்சைபாட்டு பொய் என்று உணர்கிறேள். போனஸ்ஸை பிளாக் அவுட் பண்ணியிருக்க வேண்டாம். போனஸ் வந்தது அப்பாவுக்குத் தெரியாது என்று ைேனத்துக்கொள்வதில் என்னை தான் ஏமாற்றிக்கொள் கிறேன். . குட்சம அறிவின் சக்தி எத்தகையதென அப்பாவின் மோனம் காட்டிற்று. - எல்லா நதிகளும் கடலில் விழுகின்றன. அறிவுகள் யாவும் மோனத்தில் கலந்து விடுகின்றன. தனியாக ஒளிய இடம் தேடலில் தன்னையே இழந்து விடும் அந்த மோன கர்ப்ப இருள் ஏன் அச்சம் தராது? மறைத்தேனே ஒழிய அந்த போனஸ் தும்பாய்ப் பறந்துபோனவிதம் இன்னும் திகைப்பாயிருக்கிறது. உருப்படியாக ஒரு செலவும் ஆகவில்லை. Gone with the wind. தோசைக்கல் கணக்கில் இப்போது மணிக்கட்டைக் கனக்கும் இந்த ஃபேவர் லுபாவுக்கு அவசரம் என்ன?