பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லா..சி, ராக 188 அதேபோல் தான் சுகுமார் டெயிலரிங்கில் மாதத் தவணையில் வாங்கின ஸ்-சட்டிங். கொடியில் ஐந்தோடு ஆறாக லாலியிலி. இரண்டு தவணைகள் பாக்கி. ஆபீசிலிருந்து திரும்பி வருகையில் அவன் கடையைச் சுற்றிக்கொண்டு போகி றேன். என்றைக்கு வீட்டுக்குச் சீட்டு வருகிறதோ? கண்டதே காட்சி கொண்டதே கோலம். இதைத்தான் வேண்டாம் என்று அப்பாவின் மோனம் ஆட்சேபிக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று காங்கள் சாதிக்கிறோம். இன்று கைப் பிடி மூழ்க வாழ், நாளை தன்னைப் பார்த்துக் கொள்ளும். ஆபீஸில் என் பக்கத்து மேஜைப் பெண் விதம் விதமாக உடுத்தி வருகிறாள். அவளுக்கு நான் சளைக்கக் கூடாது எனும் ஃப்ளர்ட்டிங்குக்காகவன்றி இந்த ஆறாவது ஸ்"குட்டிங் உண்மையில் தேவையா? ஒ, மனசாட்சி என்பது இதுதானோ? அப்பாவுக்கு எதுவும் தெரியாமல் இருக்க முடியாது, அவருடைய மோனம் எங்களுக்கு இருட்டு. அவருக்குக் கைப் பையில் விளக்கு. அதன் வெளிச்சத்தில் எத்தனையோ அக்தரங்கங்களை ஏடு புரட்ட அவரால் முடியும். இதை ஞானதிருஷ்டி என்று சொல்வதற்கில்லை, எங்களையே நாங்கள் ஏமாற்றிக் கொள்வதில், எங்களை காங்களே காட்டிக்கொடுத்துக் கொள்கிறோம். அப்பாவுக்கு எங்கள்மேல் உள்ள கோபம் மட்டுமல்ல, அத்துடன் எதோ துயரமும் கலந்திருந்தது. குடும்பத் துயரம் அல்ல. அதனினும் பெரிது. மகத்தானது. பட்டணத்தில் ஜனங்கள் தண்ணிருக்காகப் படும் தவிப்பு-அப்பா வாய்விட்டு அதுபற்றிப் பேசவில்லை. அன்