பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


兹 184 இi ம்ெ றொரு காள்மெனக்கெட்டு கிணற்றடிக்கு வந்து கிணற்றுள் பார்த்துக்கொண்டு கின்றார். பிறகு தண்ணிரை இழுத்து ஆசமனம் செய்து கண்களில் ஒற்றிக்கொண்டு தன் இடத் துக்குத் திரும்பிப் போய்விட்டார். முகம் கைகளில் புதைந்து தோள்கள் குலுங்கின. அப்பா அன்று பூரா சாப்பிட வில்லை. ஜன்னல் வழி வானத்தில் மாறிமாறி விளையாடும் சாயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். முகம் ஜெவ ஜெவ... அப்பா அன்று முதல் அருந்தும் ஐலம் வெகுவாய்க் குறைந்து போயிற்று. ஒரொரு நாள் அற்றே போயிற்று. "அப்பா நாடகம் பண்றார். சிறிசுகள் தோள்களை இடித்துக்கொண்டு கிசுகிசுத்தாலும் அப்பா டோன்ட் கேர். என்றுமே அவர் செயல்களும் சொல்லும் பிறர் வழக்குக்கு அடங்கினவை அல்ல. மரத்தினின்று ஒரு இலை உதிர்ந்தால் மாரைப் பிடித் துக்கொள்வார். அம்மா அவளுடைய பூஜைக்கு கந்தியாவட்டையைப் பறித்துக்கொண்டிருக்கையில் அவர் முகம் உள்வலியில் இறுகும். ஏன் பறிக்கிறாய்? கேட்க மாட்டார். மோனத்தின் சுங்கம் கடுமையானதுதான். ஆனால் அப்பா வின் நோக்குப்படி நடப்பதாக இருந்தால் கோவில். கல்யாணம், நல்லது பொல்லாது, காள், கிழமை எல்லா வற்றிலிருந்தும் பூவை பகிஷ்கரிக்கவேண்டியதுதான். பூவிலிருந்தமல்லியோ, மதுரை மல்லியோ, காஷ்மீர் ரோஜாவோ ஏரோப்பிளேனில் இடம் மாற வேண்டிய தில்லை. பூக்கடையை இழுத்து மூடு. அப்பா தத்துவம் கடக்கிற காரியமா? அப்பாவின் உள் புழுக்கத்தில் ஏதோ ஒரு செருக்கும் இருக்கும். உங்களிடம் சொல்லி என்னவாகவேண்டும்.