பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 இாலம் கொண்டிருக்கும் ப்ளேடுகள் அப்பாவின் வலதுதோளை க்ளினாகத் துண்டித்து... ஐயோ! ஐயோ! அப்பா! அப்பா! யாருக்குச் சட்டென விளக்கைப் போடத் தெரிந்தது? ஃபேன் ஸ்வீட்சை "ஆஃப்' பண்ணத் தெரிந்தது: ஐயோ! அம்மா! அம்மா! டாக்டர்-இந்த கள்ளிரவில் எவ்வளவு தூரம்: "கன்வேயன்ஸ்' வரவழைக்கவும் முடியாது. அப்பாவைக் கொண்டுபோகவும் முடியாது. எதுவும் விடிந்தால் தான். - இதுதான் பார்வதி விலாஸ்’! துண்டிக்கப்பட்ட கை, பட்டாசுத்திரிபோல், கூடத்தில் எங்களைச் சுற்றிக் குதித்துத் துடித்த காட்சி-ஜன்மத்துக் கும் மறக்க முடியாதது. அதனினும் மறக்க முடியாதது, கண்கள் செருகி, அதில் கண்ணாடி ஏறிக் கொண்டிருக்கையிலேயே அப்பாவின் கடைசி வார்த்தை, 'அரைத்துணி கலைஞ்சுபோச்சா?” இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்பா, உங்கள் வார்த்தைகளில் வாழ்வுக்கே ஒரு சேதி அடைக் திருக்கிறதோ? அப்பா! உங்களால் என்னை மன்னிக்க முடியுமா? மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு அருகதையில்லை. அப்பா! அப்பா! எல்லாம் முடிந்தபின் அன்றிரவு என் கனவில் வந்தீர் கள். உங்கள் உடம்பு முழுமையாக இருந்தது. அப்பா முகம்