பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லா. ச. ரா. 7 தான் பெரிய சகுனமாயிடறோமே, யுேம் கானுமடி, எதிரும் புதிருமடி'ன்னு அம்மா பாடற மாதிரி...' இருந்தாலும் அவளுக்குப் பூவின் மேல் அபரிமிதமான ஆசைதான். (அதனாலேயே அதை அவள் இழந்துவிட் டாளோ?) இந்த ஆசை சுயம் மாத்திரம் அல்ல: அதில் கொஞ்சம் பரம்பரை வாசனையும் கலந்திருந்தது. அவள் தகப்பனார் ஒரு கந்தவனத்தைப் பார்வையிட்டுக் கொண் டிருந்தார். தோட்டத்தின் கடுவில் பர்ணசாலைபோல் ஒரு ஒலைக் குடிசை. ராத்திரி வேளையில் ஜில் காற்று ஆளைத் தேவலோகத்துக்குக் கொண்டு போய்விடும். ‘அப்பா கயிற் றுக் கட்டிலைப் போட்டுண்டு உட்கார்க் துடுவார். அப்பா தாடி வளர்த்துண்டிருந்தார். ஏனோ தெரியல்லே. தனக்குள்ளே ரிஷின்னு தியானமோ? கரு கருன்னு தொப்புள் வரையிறக்கி மாலைக் காற்றில், தாடி ஜோரா வெட்டி வேர்த் தட்டிமாதிரி மெதுவா அசைஞ் சுண்டிருக்கும். அப்போ வாத்தியத்தில் ஸ்வரப்பற்களை அமுக்கின மாதிரி ஒரு ஒரு சமயம் விதவிதமான பூ வாசனை ஒண்ணும் பின்னாலே ஒண்னு காற்று வாக்கிலே கிளம்பும். அப்பா தாடியை உருவிக் கொண்டே ஒவ்வொண்ணா ரொம்ப துட்பமான அடையாளம் கூடத் தப்பிப் போகாமல் சொல்வார். பூ விஷயத்தில் அப்பாவுக்கு மிஞ்சித் தெரிஞ்சுக்க ஒண்னுமேயில்லை. பூ மாத்திரம் என்ன? எதைப் பற்றியும் அவரால் அப்படிப் பேச முடியும்.' அதுமாதிரி ஒரு சமயம்: "அதோ அந்தப் பூ என்னோடே பேசறதும்மா அதோ, அந்தச் சிவப்புலே வரி வரியா வெள்ளைக்கோடு போட்டிருக்கே ஆ, அதான்'