லர். ச. ரா. 189
'ஏன், அவள் இங்கேவந்துண்டு போயுண்டுதானே இருக்காள் ...அவள் செளக்கியம் உங்களுக்குத் தெரியாதா?’ ன்னார். இடக்கன். நேர்க்கேள்விக்கு நேர்ப்பதில் சொல்லிட்டுப் போகட்டுமே...ஆனால் வம்பு அடிக்கற ஆளுமில்லே. யோசனைபண்ணிப்பண்ணி மண்டையைக் குடையறது.'
'அப்படியா? எனக்குப் புதுசாயிருக்கே! பேச்சுன்னா அலைவையே!”
'உமா, நீ இன்னும் கொஞ்சம் மரியாதையாயிருக்க லாம்னு உனக்குத் தோணல்லே?"
"எல்லாரும் பிறத்தியாருக்குத்தான் வாத்தியா ரம்மா!'
'உமா, சற்றே கிதானத்தில் இரு. உன் சுபாவம் எனக்குத் தெரியும்னாலும் அவரிடமும் இப்படித்தான் நடந்து இருப்பாயா?”
'இது என்ன பயமுறுத்தல்' எனக்குக் கோபமாயும் இருந்தது. பீதியாவும் இருந்தது. அப்பா இருந்த காளில், -sair p 53Gurăgpoo pu%), “Witness Turned Hostile' என்பார். அது மாதிரியா ஏதேனும்...
'நான் என்ன பயமுறுத்தி, நீ உக்கிராண உள்ளே ஒளிஞ்சுக்கறது?’ அம்மா சிரிச்சாலும் அவள் புருவ நெரிசல் இன்னும் வேவில்லை. கூடவே சீண்டிவிட்டேனோ?
‘'என்னவோ குருவித்தத்தல் மாதிரி, முன்னுக்குபின் தாக்கல் மோக்கல் இல்லாமல் பேச்சு தாவிண்டே போச்சு, ரொம்பநாள் கழிச்சு சந்திக்கிறோம். பேச்சு சகஜமா வரதா? அதுவும் மாமியாரும் மாப்பிள்ளையும் நான் என் அமரிக்கையில் கதவு மூலையில் கின்னுண்டு பேச அவர் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கார்,
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/202
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
