பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6りsr gー・ rif。 193 இன்னிக்கு லேடிஸ் கிளப்பிலிருந்து வீடு திரும் பறப்போ ராத்திரி நேரமே ஆயிடுத்து. அங்கேயும் என்ன? பேரென்னவோ கேரம், பூப்பந்து, லைப்ரரின்னு பேரு. ஆனால் அசல் என்னவோ அரட்டை தான்! கொள்ளைப் பசி. ஏதேனும் எனக்காகப் பொங்கித் தொலைச்சுக்கணும்காரியம்னாலே வெறுப்பாயிருக்கு. உள்ளே நுழைஞ்சதும் சமையலறையிலிருந்து வெளிப் பட்டு என்னிடம் ஒரு தம்ளரை நீட்டினார். Hot சேமியா பாயஸம், முந்திரிப் பருப்பு முழுசா, குங்குமப்பூ-ஆமாம் மிதந்துண்டு-நெய் சுமா கமாளிக்கறது. ருசிச்சேன். 'H'-in-Tops.ரொம்ப தாங்க்ஸ். இன்னிக்கு என்ன விசேஷமோ?" "ஒரு Celebration. இன்னியோடு 53 வாரம் பூர்த்தி, Not Out..."? எனக்குத் திக்'குன்னது. அத்தனை நாள் ஆயிடுத்தா? 'ஒரே நிமிஷத்தில் தேவாமிர்தத்தையே விஷமாக்க உங்களால்தான் முடியும்' என்றேன். 'கசப்பது பாயஸம் அல்ல. என் எண்ணமும் அல்ல. ஒருவேளை, உனக்குப்படும் யதார்த்தமோ என்னவோ? உனக்கு அப்படித் தோன்றினால், குடிப்பதோ-தொட்டி முற்றத்தில் கொட்டுவதோ உன் இஷ்டம் தானே' Ġest Gud GAFflurg Matter of fact voiceị இந்த மனுஷனுடன் ரோசம் கட்டுப்படி ஆகாது. ஆனால் கோபம் மட்டும் இருக்கு. ஒரு பக்கம் ருசி பிடிச்சி ழுக்கறது. பசியோ பிராணன் போறது. எதிரே குடிக்காமல் எடுத்துண்டு உள்ளே போயிட்டேன். பா.-13