பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


篮96 தாயம் பார்த்திருக்கிறேனா? அடுத்து என் தோள்மேல் கை வைத்துக் கொண்டு கண்சிமிட்டியபடி, 'ரவிச்சந்தர், இது உனக்கும் எனக்கும் இடையே. They think you are a fine catch. And you are, you know! உன் தங்கைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டே. கடம்ைகளைச் செய்துட்டே... உனக்கு இக்கு பிடுங்கல் @@Luirgo eg6 Traù a-tor GPG Tough Assignment. 2 gör இஷ்டம். நான் கட்டாயப்படுத்த மாட்டேன். Up to you.' சார் ஒண்னும் சமஸ்கிருதத்தில் பேசவில்லை , ஆனால் அவர் எச்சரிக்கையை ஏற்கும் நிலையில் நான் இல்லை. அம்மாவிடம் தெரிவித்ததும் கண்ணிரே விட்டுட்டாள். "ரவி, நீ பட்ட சோதனைக்கு, அம்பாள் கண் திறந்துட்டாள்டா... இனி நான் கிம்மதியாக கண் மூடுவேன்.' In the name of all that is beautiful. கான், உமாவைப் பார்த்திருக்கிறேன், ஆனால் எதோ ஸ்ன்னிதானம் என்கிற முறையில். ஆனால் எனக்குக் கிடைக்க இவ்வளவு அருகே இருக்கிறாள் என்று கனவில் கூட கினைத்திருப்பேனா? What a jolt! சாம்பசிவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் தான் S.K.C. பண்ணினான். என்ன மாப்பிள்ளே!' என்றே அவர்களுக்கெதிரேயே அழைத்து விட்டான். அவனுக்குஅங்கே அவ்வளவு சுதந்தரம் உண்டு. சாம்பசிவன் இந்த சமயத்துக்கு விஸ் தாரமாவே கினைப்புக்கு வருகிறான். ஏன்? புரியவில்லை.