பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


& பார்க்கவி 'என்னப்பா பேசறது?’ அப்போ எல்லாம் அவளுக்கு அப்பா வாக்கு வேதவாக்கு. போகப் போகத்தானே தெரியறது. யார் யார் வார்த்தை எவ்வெவ்வளவு எடை தாங்கும்னு ஆன்ால் அவர் வாயை வெறுமெனக் கிண்டினா லும் அவர் எப்பவும் சுவாரஸ்யமாயிருப்பார். அவள் கேள்வி காதில் விழாததுபோல் அவர் இருக் தார். “பூ என்னப்பா சொல்றது?’ “என்னத்தைச் .ெ சா ல் ற துன் னா என்னத்தைச் சொல்றது?’ ஒரு முறைக்கு மறுமுறை கேட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உங்கள் மாதிரியெல்லாம் உள்நாக்கு தெரிய வாயைத் திறந்து வளவளன்னு வம்பளங் தால் தான் பேச்சா? பேச்சுன்னா பேச்சு என்று அர்த்த மில்லை, பேச்சுன்னா பாஷை என்று அர்த்தம்.' 'இப்போ இதன் பாஷை என்ன பாஷை?” “அது அதுக்கு அதனதன் பாஷை உண்டு.' 'இப்போ இதன் பாஷை என்ன பாஷை?” 'பூவின் பாஷை அதன் மணம்தான்.' 'மணக்காத பூக்கள் இருக்கே!” ‘மணக்காத பூக்களின் பாஷை அவைகளின் அழகு தான்.' ‘அழகில்லாத பூக்கள்?” "அழகில்லாட்டா மணமிருக்கும். மணமில்லாட்டா அழகிருக்கும்.' 'மணமுமில்லே அழகுமில்லே, அப்போ?’’ 'அது பூத்திருக்கே அதான் அதன் பாவுை.”