206 தாயம்
“ஸ்னானம் பண்ணலாம். ஆனால் முன்னால் ஒரு தாயக்கட்டான் போடலாம்...'
'அதுக்கென்ன அவசரம்? ஸ்னானம் கூடப் பண்ணாமல்?”
என்மேல் படாது, என் கை தம்ளரைப் பிடுங்கிக் கொண்டு, உடனே தாழ்வாரத்தில் உட்கார்ந்து கட்டானை வரைய ஆரம்பித்து விட்டார். நானும் எதிரே உட்கார்க் தேன். திடீரென இவரிடம் ஒரு ஈர்ப்புசக்தியை உணர்ந்தேன்.
'உன் கையில் தாயக்கட்டையைப் பார்த்தவுடன் என் தலையையும், நம் தலை விதியையும் இணைத்த ஏதோ ஒரு சேதியை-நம்மை மீறிய சக்திகள் அனுப்பியிருக்கும் சேதியைப் படிக்கிறேன்-'
கேலியில் என் கீழ்உதடு சுருண்டது; என்னைச் சினிமாப் பித்துனு கேலி செய்வதில் குறைச்சலில்லே. ஆனால் எனக்குக் கூட இப்படி ஒரு சினிமா டயலாக் தோணாது!’
'Perhaps So...வாழ்க்கையில் சில நெருக்கடி கட்டங்கள் நேர்கையில், வேஷங்கள் உரிந்து அந்த சமயம் கிர்வாணம் -35.56urg, eg, Unreal -gă Melodramatic găii, படத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம், கொஞ்சநாட்களாகவே-உனக்குத் தெரியவில்லையா?”
குரலில் ஓர் அசாதாரண நிதானம். அமைதி வாயடைத் துப் போனேன்.
'என்றேனும் ஒரு நாள் நாம் இந்த வேளையை கேருக்கு நேர் சந்தித்துத்தானே ஆக வேண்டும்...? வேளை வந்துவிட்டது."
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/219
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
