பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால் பூரீமான் பாஸ்கரன், வழக்கப்படி, விடிவெள்ளி வேளையில் சிந்தாமணி படித்துறையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில், தண்ணிரில் காலடியில் கெட்டியாகத் தட்டுப்பட்டு, அதை எடுத்துப் பார்த்தால்-விக்ரஹம்: அன்று வெள்ளிக்கிழமை. பாஸ்கர் புல்லரித்துப் போனார். வீடு திரும்பியதும், ரேணு வழக்கம்போல் அப்போது தான் காப்பியடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குளியல் எல்லாம், காப்பிக்கடை ஆனபின் தான். பாஸ்கரிடம் ஒரு விசேஷம். தன்னை எடைக்கல்லாக வைத்துக் கொண்டு, மற்றவர்களும் தன் எடையையே, அவர்களுடைய செயலில் காட்டவேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. கட்டாயப்படுத்துவதுமில்லை. என் அம்மா சின்ன வயதிலிருந்தே என்னை, ப்ராத ஸ்னானம், சந்தியா வந்தனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று வளர்த்துவிட்டால் எல்லாரும் அப்படி இருக்க முடியுமா? பல் குத்திக் கொண்டே அடுப்பு பற்ற வைக்காமலிருந்தால் சரி, அஞ்சுக்கு இரண்டு பழுதில்லையானால் வண்டியை ஒட்டு! என்று வாய்விட்டே சொல்லமாட்டார். அம்மா, சரியாகப் பிள்ளை தலையெடுக்கற சமயத் தில், வந்த வழி போய்ச்சேர்ந்துவிட்டாள். பாஸ்கர் அவளுக்கு ஒரு மகவு. ஆகையால் அவள் மறைந்ததும் அவர் ஒண்டிக் கட்டையாகி விட்டார். ரேணு புத்தியில் அல்லது தேவையான சமயங்களில், உடல் சுறுசுறுப்பில், எள்ளளவும்குறைந்தவளல்லள். சக்தி