பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 கறந்த பால் திரவியங்களைச் சேகரித்து, அன்பு பொங்கக் குளிப்பாட்டு வார். உயர்ந்த பட்டுத் துணியில், பக்தியுடன் ஒற்றி, துடைத்து, உடுத்தி, மலர் அணிவித்து தாபதீபம் காட்டி, நேரம் போவதே தெரியவில்லை. மகராஜி, அத்தனை ஆரர்தனைகளையும் ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள்! அவர் உப்பு இல்லாமல் உபவாஸம் இருக்க முயல வில்லை. கிடக்கைக்கு மான்தோல் தேடவில்லை. அல்லது கட்டாந்தரையில் படுக்க ஆரம்பிக்கவில்லை. ஏன் என்றால் யாரேனும் கேட்டிருந்தால் எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லையே! என்று உண்மையைத் தான் சொல்லி யிருப்பார். அவருக்கு இதுபோல் ஆராதிப்பது பிடித்தது; ஆராதித்தார். தினம் முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையேனும் அம்பாளுக்கு ஒரு சொம்பு நிறைய பாலாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும். இந்த ஆசையில் உள்ள நெஞ்சீரல் யாதெனில் சுத்தமான கறந்த பசும்பாலுக்கு எங்கே போவேன்? (குடம், பைப்பால் கிடைக்கலாம்.) இது கலப்பட யுகம். ஒரு செம்பு கிறைய துரை வழிய ஒரே மாட்டுப் பசும் பால்...டவுனில் எங்கே போவேன்? நாளடைவில் இந்த கெஞ்சிரல் விசிறிக்கொண்டு, வீசிக்கொண்டு, விபரீத ஆசைக்கனல் தகிக்கத் தலைப் பட்டது. காமே ஒரு பசுமாடு வாங்கிவிட்டால் என்ன? பின் யோசனையில் டவுனில் வாடகை வீட்டில் மாடு வைத்துக் கொள்வது என்பது கடைமுறையில் சாத்யப்படுமெனத் தோன்ற வில்லை. ஆனால் அம்பாளுக்கு சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்து விக்ரஹத்தின்மேல் பாலின் வெண்மை