பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


234 கறந்த பால் நான் சொல்ல கினைச்சதைச் சொல்ல முடியும். ஐயா, உலகத்திலே கறந்த பாலே கிடையாது. அடிச்சு சொல் றேன். கடவுளுக்கே அந்த எண்ணம் கிடையாது. அம்மா, நீ என்ன சொல்றே?" ரேணு முகம் வெளுத்து, சிவந்து, லேமாகி, மறுபடியும் வெளுத்து-இதென்ன டெக்னி கலர்-பாஸ்கருக்கு வியப்பு. 'ஐயா கறந்த பால்னா என்ன தெரியுமா? ஏமாந்தாங் கொள்ளி.' - அவளுடைய நெற்றி நரம்புகளில் பச்சைக்கொடி ஒடிற்று. விழிகளில் ஏன் அப்படி ஒரு திகில்? 'அம்மா, நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்லே?" அவள் விழிகள் வெளியில் பிதுங்கிவிடும் போல் ஆகி விட்டன. 'அம்மா நாகம்மா என் உடன் பிறந்தா...' புதிர் மேல் புதிர். ரேணுவுக்கு திடீர் களைப்பில் விழிகள் செருகின. சட்டென உள்ளே போய்விட்டாள். கிழவன் பாதி கறவலினின்று வெடுக்கென எழுந்து வந்து அணை கயிற்றினாலேயே பையனை வீறுவீறு என்று வீறி னான். அடி செருப்பாலே, ள வர். உன்னை எவன் விளக்கம் கேட்டான்?” பையன் வைதுகொண்டே எழுந்து ஓடினான். குவளை அப்படியே தரையில் உருண்டது. டேய் ராத்திரி நீ வீட்டுக்கு வரமாட்டே? அரிவா ளோடு காத்திட்டிருக்கேன், வா." கிழவன் ஒல்லி. மூச்சு இரைத்தது. வயிறு முதுகோடு ஒட்டித் துருத்தி வாங்கிற்று.