பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


GU甲。母。伊f。 3.25 & பூமியில் பால் தேசப்படம் வரைந்து இன்னும் விரிந்து கொண்டே போயிற்று. -"முழுத் துாய்மையான பண்டம் யாருக்குமே கிடை யாது என்று ஆண்டவன் விதியோ?”. 'உன் முயற்சிகளை என்னிடம் கொண்டுவா. உன் முயற்சிகளில் நீ தோல்வியுற்றால் உன் தோல்வியை என் னிடம் கொண்டுவா." -இது ைேதயினின்று ஒரு வாக்யம். ஆங்கில மொழி பெயர்ப்பினின்று பாஸ்கருடைய மனதில் சொந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு, கீதையுடன் அவருக்கு இன்னும் அதிக பழக்கமில்லை. ஆனால் இந்த அடி இப்போது தோன்று வானேன். கணவன் மனைவி இடையே பலப்பரீட்சை முறை யில்லைதான். அவளும் அவருடைய அந்தக் கேள்விக்கு, ஒரே கேள்விக்குக் காத்திருந்தாள். இல்லை காத்திருங் தாளா? . அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், உடனே ஒரு நுனியைப் பிடித்து இழுத்தால் அத்தனை முடிச்சுகளும் அவிழ்வதுபோல் புதிர் பிரிந்திருக்கும். இல்லை, பிரிந்திருக் குமா? அவருடைய நடமாட்டத்தை, செயல்களை, அவள் விழிகள் தொடர்வதை, அவர் முதுகைத் துறுவுவதை பாஸ்கர் உணர்ந்தார். என்னவோ நேர்ந்துகொண்டிருக் கிறது. ஆனால் பாஸ்கர் அந்தக் கேள்வியைக் கேட்கு மாட்டார். தானாகக் கணியாததை தடியால் அடிக்கமாட டேன். பர்-16