பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கறந்த பால் ரேணு டீ சாப்பிட வில்லை. அவள் கைகள் அவள் மடியில் அமைதியான சிறகுகளாய் ஒன்றன் மேல் ஒன்றாய் உறங்கிக் கொண்டிருந்தன. அவள் காலடியில் லல்லி தானே தன்னுடன் ஏதோ பேசிக்கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள். பாஸ்கர் எழுந்து நின்று-என்ன உயரம்!-குனிந்து லல்லியைத் தூக்கிக் கொண்டார். சாவியை ரேணுவிடம் மறுபடி ஒப்படைத்தார். போவோமா?"

Thanks நாகம்மா' கூண்டுக்கிளி.

கூடத்தின் அந்தி இருளில், திடீரென பாஸ்கர் கன்னத் தில் உதடுகள் உராய்ந்தன. பாஸ்கர் மார்புள் பாறை ஏதோ உருகி உடைந்தாற் போன்ற பயங்கர இன்பம், கல்லா? பணியா? நெய்யா? நீங்களா கறந்த பாலைத் தேடறேள்?'. அவள் விழிகள் ஸ்படிகத்தில் பளபளத்தன. கல் கண்ணிர் கசிந்தால் இவ்வளவு அழகா? மறுநாள் மாலை பாஸ்கர், ஆபீசிலிருந்து திரும்பி _ w y • - r - * உடுப்புகளைக் கழற்றி, உடம்பைச் சுத்தி செய்து கொண்டு பூஜையறையில் நுழைந்தால் -விக்ரஹத்தைக் காணோம். ரேணு குத்துவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தாள். 'எனக்கு ரொம்ப காளாகவே எண்ணம். இந்த மாதிரி யான பிரதிஷ்டை, நமக்கு வழிபாடு வழி தெரியாமல் சம்சாரி வீட்டில் நீடித் திருப்பது சரியல்ல. அதனால் இன்று அவள் வந்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டு s & 9