பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


üᏬf# • Ꮉ • ᏰᏉᎥᎢ • 15 அவளுக்குப் பசி தாங்கவில்லையென்று எப்போது கண்டு கொண்டாரோ, மாமியார் தன்னிஷ்டப்பட்ட போது தான் சாப்பிட வருவார். அந்தப் போட்டியில் சாதம் ஆறிப் போய் முள்முள்ளாய் விறைத்துக் கொண்டாலும் அவருக்கு அக்கறையில்லை. அவளுக்குக் கண்ணில் உசிர் வந்து கின்ற பிறகு, உதட்டையமுக்கித் தனக்குள் ஒரு சிரிப்பு சிரித்துக் கொள்வார். சரி, இலையைப் போடறது, தட்டை வெச்சுக் கறது; இந்த நாளில்தான் காம் பசிச்சப்போ சாப்பிட முடி யல்லியே. பிறத்தியார் வயத்தைப் பார்த்து, நம்ம வயத்துக் குக் கொட்டிக்க வேண்டியிருக்கு!-’’ பெரியவள எப்பொழுதுமே என்ன வேனுமானாலும் சொல்லலாம். அவர்கள் சொல்வதில் கியாயம் இருக்கோ இல்லையோ, அவாளுக்குப் பெரியவாள் என்கிற அவர்களு டைய ஸ்தானம் மாத்திரம் கெட்டி, அதை வெச்சுண்டு அவர்கள் யார்மேல் இருக்கிற ஆத்திரத்தையெல்லாம் யார் மேலே வேனுமானாலும் தீர்க்க வழி பார்த்துண்டு அட்டம் செய்யலாம். அம்மாவுக்கு யார் மேலே ஆத்திரம் இல்லை? முதலில் அவருடைய கணவன், தன் மாமனார் பேரிலேயே ஆத்திரம் பொங்கி வழிந்தது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஒருநாள் விட்டு ஒரு நாள் நடக்கும் தர்க்கங்களில் அடிபடும் பழைய ஏடுகளிலிருந்து அப்படி இப்படியென்று முன்னும் பின்னுமாய் விஷயங்கள் வெளிவரும். கூட்டுக் குடும்பத்தில் வெகுநாள் கஷ்டப்பட்ட பிறகு, எப்படியோ தங்களைப் பிரித்துக்கொண்டு வந்த பிறகு, பத்து மாதம் சேர்ந்தாப்போல் குடித்தனம் கடத்தவில்லை. பஞ்சுப் பொதியில் பொறி வைத்தாற்போல், கண்ணப்பன் சிவதரிசனம் கண்டாற்போல், மாமனாருக்குத் திடீரென்று தேசத் தொண்டில் ஆர்வம் நேர்ந்துவிட்டது. உத்யோகத் தைத் துறந்து இயக்கத்தில் இறங்கினார். எங்கேயோ ஊர் தள்ளி, உள்ளேயும் தள்ளி விட்டார்கள். உள்ளே போன