பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பார்க்கவி ஆரம்பிச்சுடுத்து. என்னன்னு பார்த்தா, ஒரு புதர் மறைவில் மனுஷன் விழுந்து கிடக்கான். உடல் முழுக்க லேம் பாரிச்சுகிடக்கு. யாருக்குக் காத்திண்டிருக்கிறது! வெட்டியான் தலையாளி மணியக்காரன் எல்லாம் வந்து ட்டா. நீ வரவரைக்கும்னா, நீ போய் அஞ்சு வருஷமாயும் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கல்லே. நீ எங்கே யிருக்கேன்னு யார் என்னத்தைக் கண்டா? எனக்கு மனசு கேக்கல்லே. எனக்குத் தெரிஞ்ச விலாஸ்த்துக்கு இதை எழுதிப் போடறேன். இதுவே போய்ச் சேர்றதோ இல்லியோ? சமத்தாயிரு. நான் வ்ேறென்னத்தைச் சொல்லப் போறேன்...?” அன்று முழுவதும் வீடு ஒரே ரகளை. அவருக்கென்ன. சமாசாரம் கேட்டதற்கு ஸ்நானம்கூடப் பண்ணாமல் வெளியே போயிட்டார். அம்மாதான் கூடத்தில் இரைஞ்சுண்டிருந்தார், பழக்கத்தை யெல்லாம் புதுக் கதையாய்ப் படிச்சிண்டு. 'கன்னா வேனும் அவனுக்கு! கோவிந்தாக் கொள் ளிக்குத் தானே அவன் லாயக்கு கிடைக்க வேண்டி யதுதான் கிடைச்சிருக்கு. ஏமாந்த கொள்ளி அகப்பட்டான் என் பிள்ளைன்னு அவன் தலையில் தோசியைக்கட்டி யனுப்பிச்சுட்டானே! மறப்பேனோ என்ன? ஒரு கல் யாணம்னா கிள்ளுக் கிரையா? முன்னே பார்த்து, பின்னே பார்த்து ஜாதகம் குலம் கோததிரம் பார்த்து விஜாரிச்சு, பெரியவாளைக் கலந்து யோஜிச்சு, ஆயிரம் யோசனைப் பண்ணி நாலுபேர் நடுவே தர்லியைக் கட்டி வீட்டுக்குப் பொண்ணை இழுத்துண்டு வருவா. இந்த மாதிரி அக்ரமம் எங்கே நடக்கும்? யாருக்கு அடுக்கும்? இவதாம்மா பார்க்கவி-(பழிச்சுக் காண்பிக்கிறார்) ஹி ஹீ ஹீ-உன் நாட்டுப் பொண்ணு...அம்மாக்கு வீந்து நமஸ்காரம் பண்ணு'-இவளை முன்னேயின்னே கண்டது யாரு?