பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@l)f gー・女ff。 19 கோத்ரமே ஒண்ணாயிருந்தாலும் யாருக்கு என்ன தெரிஞ்சுது? எப்படி சப்பந்தம் பண்ணிண்டு வந்தானோ அப்படித்தானிருக்கும் அன்னியிலிருந்து வீடு. என்னிக்கு மகராஜியம்மா படி மிதிச்சாளோ அன்னியிலிருந்து அழிஞ்சுதய்யா என் குடும்பம்! என்னென்னெல்லாமோ ஆசை வெச்சுண்டிருந்தேன்; இப்பவும் என்னை ஏமாத் திப்பிட்டான் என் சம்பந்தி! அவனைக் கண்ணால் மட்டும் கண்டேன்னா கிழிச்சு மாலையாப் போட்டுண்டுட மாட்டேனா, அப்பறம் தாக்கேறினாலும் சரின்னு!” இன்னும் இதே ரீதியில் என்னென்னெல்லாமோ. அப்பாவுக்கு அழுவாளா? அம்மாவின் ஆத்திரத்திற்கு பயப்படுவாளா? அதென்னவோ வாஸ்தவந்தான். அம்மா தன் பிள்ளைமேல் என்னன்னவோ ஆசையெல்லாம் தான் வைத்திருந்தார். தன்னுடைய சரியான வயது நாளில் இழந்த பதவி யெல்லாம் மீண்டும் பெற்றுவிடலாம் என்று வயிற்றையும் வாயையும் ஒடுக்கி, படாதபாடெல்லாம் பட்டு, அவனைப் படிக்க வைத்து, யார் மூலமாகவோ சிபாரிசு புடிச்சு உத்யோகம்கூடப் பண்ணி வெச்சு-ஓரொரு நாள் சண்டை வருகையில் இடிச்சுக் காண்பிப்பார்! “என்னமோ உலகத்தில் இல்லாத ஆம்படையானை ஏமாத்திப்புடிச்சட்டேன்னுஇறுமாந்துாடாதேடீ! எனக்குப் புள்ளை, அப்புறந்தான் உனக்கு ஆம்படையான். உனக்கு முன்னால் என் வயத்தில் அவன் இருந்த நாளிலிருந்து எனக்கு அவனைத் தெரியுண்டி! நான் இல்லாட்டா அவன் இல்லைன்னு தெரிஞ்சுக்கோl-ஆமாம், சொல் லிப் பிட்டேன்- என்று கறுவுவார். அவள் அகமுடையான் இருவருக்கும் இடையில் சப்பளம் கொட்டி உட்கார்த்திருப்பான். கறுப்பு முழி