பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(? பார்க்கவி மாத்திரம் இருவரையும் மாறி மாறி நோக்கும். கடைக்கண் பார்வையில், வெள்ளை முழியில் கடையும். அம்மா அசரீரி மாதிரி பேசுகையில் அந்த மனுஷன் யார் பங்கும் எடுத்துக் கொள்ளாமல் பதுங்கிய விலங்கு போல் இருவரையும் மெளனமாய்க் கவனிக்கையில் அவளுக்குப் புரியாத திகிலா யிருக்கும், இன்னும் என்ன இருக்கோ, என்ன வரப் போகிறதோ என்று. ஆமாம், உண்மையில் அவரைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? எப்படியாவது பிறந்த வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும் என்று வந்துவிட்டாள். ஆனால் இப்போது தான் தெரியறது பொரியற எண்ணெயி லிருந்து எரியற நெருப்பில் விழுந்து விட்டாள். என்னவோ கொட்டிக் கொட்டிக் குளவி விஷத்தை ஏற்றுமாம், அது மாதிரி அம்மா கறுவிக் கறுவி அவளுக்குள் ஏதோ இறுகிக் இறுகிக் கனத்துக் கொண்டு வருவது போல் தோன்றிற்று. அதை எதிர்த்துக் கேட்டுடலாமா, இதை எதிர்த்துக் கேட்டுடலாமா, என்றுதோன்றும். ஆனால் அம்மா பரந்து தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உ ட் க ர் ங் தி ரு க் ைக யில், என்னவோ யாக குண்டத்தில் கின்றெரியும் நெருப்பைப் போல், கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும். அம்மாவுக்கு அது என்ன சக்தியோ? அதன் பேர் தான் தைரிய லட்சுமியோ? அம்மா சாதாரணமாகக் கீழே உட்கார்ந்திருந்தாலும் ஸிம்ஹாஸ்னத்தில் உட்கார்ந்தாப் போலேத்தான் இருக்கு. கரிப்பு என்கிறது என்ன கிறமாயிருக்கும்? கறுப்பா? சிவப்பா? பாம்பு விஷத்தைப் போல் பச்சையாயிருக்குமா? இப்பொழுது களைப்பும் சிக்தனையுமாய் அவள் படுத்திருக்கும் அரை உறக்கத்தில் ஒரு கனவு கண்டாள்.