பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லா. ச. ரா. 総説 அவளும் அம்மாவும் பாம்புகளாய் மாறிவிட்ட மாதிரி யிருந்தது. இரண்டும் எதிருக் கெதிர் தலையை உயரத் தூக்கிக்கொண்டு, கண்களில் கொடுரம் கொதிக்க ஒன்றை யொன்று சிறிக் கொண்டு உக்கிரமாய்ப் படத்தைத் தரை யில் அடித்து அடித்து விஷத்தைக் கக்குகின்றன. இரண்டு விஷமும் ஒன்று கலந்து திரண்டு-என்ன ஆச்சரியம். ஒரு பூ உருவாகிறது: யானை காது போல் பெரிய கறுத்த இதழ் கள், பச்சைக் காம்பிலிருந்து விரிகின்றன. பூவின் நடுவில் செக்கச் செவேல் என்று ஒரு இரத்தத் தண்டு கிளம்பு கிறது. அதிலிருந்து சொரியும் இரத்தத் துளிகள் பூவின் இதழ்கள் மேலும் தரை மேலேயும் சிந்துகின்றன. சிந்திய இடத்தில் ஒவ்வொரு கண் சிமிட்டிக் கொண்டே திறக் கிறது. கரிப்பு! வீல் என்று அலறிக்கொண்டெழுந்தாள். பொழுது நன்கு சாய்ந்து, மரங்களின் கிழல்கள் நீள ஆரம்பித்துவிட்டன. தலைக்கு நேர் வானத்தில் ஒரு கிளிக் கூட்டம் பறக் தது, புஷ்பங்களை ஆகாயத்தில் தூவினாற் டோல், நாமும் ஏன் அது மாதிரி காற்றில் மிதந்து போக முடிகிறதில்லை. சரி சரி, இப்படி யோசனை பண்ணிண்டிருந்தால், இன்னி முழுக்கப் பண்ணிணடிருக்கலாம். வேளையோ முழி பிதுங்கிக் காத்துக் கிடக்கு, நாளைக்கு வெள்ளிக்கிழமை. நமக்கேது வெள்ளிக் கிழமை? வேலைக்குத்தான் வெள்ளிக் கிழமை. வெள்ளிக்கிழமை பண்ணி யாகனும் போறும் போறாததற்கு வேறே- நனைச்சு வெச்சிருக்கு'! நான் ஏதாவது வேண்டாம்னு சொல்லிடுவேனோன்னு அவரே பண்ணிவிடற காரியங்களில் அது சேர்த்தி.