பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2? - பார்க்கவி ஆமாம், யாருக்கு என்ன வேண்டியில்லை: பண்டம் கெட்டுப் போனால் பத்து கிமிஷம். மனுஷா தவறினால் பத்து நாள் அவ்வளவுதானே? இன்னிக்குச் சாப்பிடலாமா, வேண்டாமா? இன்னிக் கென்னவோ அதான் மலைப்பாயிருக்கு. வேண்டியுமில்லை. சரி, ஒரு நாள் சாப்பிடாட்டால்தான் என்ன? உசிர் போயிடாது; அட அப்படிப் போற உசிர் போகட்டுமே! எல்லாக் காரியத்தையும் முடித்துக்கொண்டு நிமிர்கை யில் நல்ல நேரமாகிவிட்டது. கட்டையை நீட்டிவிட்டால் போறும். இன்றுதான் மாடிப்படிச் சுவரைப் புடிச்சுண்டு படிகளை ஒண்ணொண்ணாய் ஏறினாள். அடேயப்பா என்ன வசதி அறைக் கதவு சாத்தியிருந்தது. மெதுவாய்த் திறந்தாள். 'யார் அது விடமுடியாது போ. இன்னியிலிருந்து கான் இங்கேதான் படுத்துக்கப் போறேன். இந்த ரூமை உனக்கு ஒண்னும் குத்தகைக்கு விட்டுடல்லே, இது உனக்கு மாத்ரம்னு-’’ பாக்கி வார்த்தைகள் முடியு முன்னாலேயே கதவை மூடினாள். சிரிப்புக்கூட வர்ரது. அம்மா என் இப்படி தன்னைத் தானே முடுக்கிண்டு கத்தறார்? மாடியிறக்கத்தின் முதற் படியில் உட்கார்ந்தாள், கன் னத்தைக் கையில் தாங்கிக் கொண்டு. இன்னிக்கு நானே கொஞ்சம் சுருக்க, என்னாலும் தெரு கூட அடங்கிடுத்தே! இருளோடு இருளாய் இந்த மாதிரி இழைஞ்கிருக்கிறதும் இதமாய்த் தானிருக்கு. என்னவோ நான் என்கிற தன்மையின் பிரிவான தனி மையோ பொறுப்போ இல்லாமல், கர்ப்பத்தில் தாங்கும் சிசுப்போல் ஏகாந்தமான இருள் அவளைத் தன் வயிற்றுள்