பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ே . சி. ரா. £5 மாடிக்கும் கீழுக்குமாய்த் தேடாத இடமெல்லாம் தேடி யாறது. தென்னை மரத்தில் புல் புடுங்கியா றது. வீட்டில் இருக்கிற பெட்டி பேழை, டப்பா, பானை எல்லாம் தலை கீழாகக் கொட்டியாறது. கொண்டாடி உன் சாவியை,’அவள் பெட்டிக்குச் சாவியேது. அத்துக்கு ஒரு கம்பியை வளைத்து மாட்டியிருந்தாள். அவள் பெட்டியில் என்ன இருக்கு முன்னாலே? ஏதோ ஒரு புடவை. நாலு ரவிக்கை, போன வருஷத்துக் காலண்டரிலிருந்து அவளாக ஆசைப் பட்டுக் கத்தரித்து எடுத்த படம், வருஷப் பிறப்புக்கு நமஸ்காரம் பண்ணினதற்காக அம்மா கொடுத்த வெள்ளி காலணாக்காசு; அவ்வளவுதான். ரூபாயா? அடே அம்மாடியோ! ரூபாய் இருந்தாலும் அவளுக்குச் செல் வழிக்கத் தெரியாது. - - ஆனால் அம்மாவுக்குப் பதைபதைப்பு அடங்கவில்லை. “இங்கே என்னவோ குது நடந்திருக்கு; சந்தேகமே யில்லை. ஒரு காலணாக் காசு காண, ஒரு சொட்டு ரத்தம் சிந்தறேன், ஒரு பச்சை நோட்டு வெச்ச இடத்திலே காணாம்னா வயிறு எரியறதே-' அம்மா சாப்பிடல்லே. ஆனால் அவர் மாத்திரம் இலையைப் போடுன்னு கேட்டு, மூக்கைப் பிடிக்க இழுத்து விட்டு, பேப்பரைத் தூக்கிண்டு வாசல் திண்ணைக்குப் போயிட்டார். புருஷாளே. அப்படிதான். - அம்மா கூடத்திலேயே, தூண்மேலே சாஞ்சுண்டு எங்கோ வெறிச்சுப் பார்த்துண்டு ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசாமே உட்கார்ந்திருந்தார். அவளுக்குத் தாக்கங்கூட கண்ணைச் சுத்த ஆரம்பிச்சுடுத்து. எதோ தீர்மானத்துக்கு வந்து அம்மா சட்டுனு எழுந்தார். - 'அம்பீ-' 'என்ன?" அவள் கணவன் உள்ளே வந்தான்.