பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பார்க்கவி "கான் ஒரு தீர்மானத்துக்கு வந்துாட்டேன். எல்லோ ருமா கல்பூரத்தை எத்தித் தட்டிடுவோம் எடுக்கல்லேனு. இல்லாட்டா என் மனம் சமாதானமாகாது. பைத்தியம் பிடிச்சுடும் போல் இருக்கு. அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மாம்பழத்துள் கத்தி யிறங்குவதுபோல் அடி வயிற்றுள்ளே சில்லிப்பு துண்டமிட்டது. "ஒரு நூறு ரூபாய்க்கு இவ்வளவு ரகளை பண்ணுவது கியாயமாயிருக்கா அம்மா? அப்புறம்-?" - 'கியாயம் அகியாயம் எல்லாம் எனக்குத் தெரியுண்டா. எனக்கு அப்புறம், என்னால்தான் நீ பிறந்தே. அதை ஞாபகம் வெச்சுக்கோ எனக்குக் கத்துக் கொடுக்க வேண்டாம். மனசு வெளிச்சமாயிருக்கறவா எதுக்குமே பயப்பட வேண்டாம். எத்தனை ரூபாயிருந்தாலும் அவாளுக்கு ஒண்னுதான்-' ‘சரி, உன்னிஷ்டம்..." அம்மா கர்ப்பூரத்தை சுவாமி விக்ரஹத்திற்கு எதிரில் ஏற்றிப் பலகையைத்தட்டி ஊதினார். விக்ரஹம் அதிர்ந்து கீழே விழுந்தது. அவள் வயிற்றுள் சுவர் இடிந்தது! அடி வயிற்றை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். அம்மாவின் கண்கள் திரிகள் மாதிரி எரிந்தன: விக்ரஹத்தை திமிர்த்தி வைத்துக் கர்ப்பூரத்தை ஏற்றினார். 'ஊம்-ஆகட்டும்-” அடுத்தாற் போல் அவர் தட்டினார்; வயிற்றுள் இன்னும் நாலு கற்கள் இடிந்தன. அவர் தட்டிய தினுசைப் பார்த்தால் இன்னும் எத்தனை முறை தட்டச் சொன்னா லும் அவர் தாயார். எப்படியாவது இன்னி ரகளைக்கு முடிவு கட்டினால் சரி. அவளுக்கே அப்படித்தானிருந்தது. ஆனால் சோடாக்கோலி மாதிரி பிதுங்கிய விழிகளுடன்