பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Güff。呼。JT。 3? விக்ரஹம் அவளைப் பாாக்கையில், அவளுக்கு என்ன வென்றே தெரியவில்லை. p “ஊம்-ஆகட்டும் 'கான் மாட்டேன் அம்மா-' 'ஆ பாத்தியா, பாத்தியா-பாத்தியாடா அம்பி!' அம்மா சிரிப்பில் புகை கிளம்பிற்று. இதுக்குத்தான் சொன்னேன்; இந்த வீட்டில் ஏதோ சூது நடக்கறதுன்னு! இப்போ விளங்கிப் போச்சோன்னே?” - அழுகை, தைரியம், ஆத்திரம் எல்லாம் ஒருங்கே அவளை அழுத்தின. 'உங்களுக்கு என்ன வேனுமானா லும் விளங்கிக்கட்டும். நீங்கள் என்ன வேணுமானாலும் கினைச்சுக்கலாம். எனக்கு அதைப் பற்றி அக்கறையில்லை. நான் மாட்டேன். அவ்வளவு தான். சாமியே உங்களுக்குத் தானிருக்கிறார். மத்தவாளுக்கில்லைன்னு மூக்கைப் பிடிச் சுண்டு பூஜை பண்ணின்டு தலையில் தூக்கிவெச்சுண்டு நான் கூத்தாடவும் இல்லை. அடுத்த நிமிஷம் காலில் கட்டி இந்த மாதிரி அடிக்கவுமில்லை. ரெண்டுமே எனக்கு வேண் டாம்! மாட்டேன்னா மாட்டேன்-' அவள் போட்ட கத்தலில் தொண்டை கிழிந்தது. கால் கட்டை விரலிலிருந்து ரத்தம் பாய் மாதிரி சுருண்டு கொண்டே வந்து தலைக்கேறிற்று. மடேரென்று அப்படியே குப்புற விழுந்துவிட்டாள். அப்புறம் என்ன கடந்ததென்று தெரியாது. மறுபடியும் விழித்துக் கொள்கையில் அவளைக் கும்மிருள் சூழ்ந்திருந்தது. உடம்பைக் கல்மேல் அறைக் தாற்போல் கணுக்கணுவாய் முறித்து வலித்தது. & £ 莎 * * அம்புமரி