இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
லா. சி. ரா. 31
'யார் அங்கே?' எழுந்து கின்றாள். நெற்றியில் வேர்வை முத்திட்டது. -
'யார் அங்கே?' யாருமில்லை. ஸ்ன்னமாய் மூச்சுப் போல் குளிர்ந்த காற்று கிளம்பி முகத்து வேர்வையை ஒற்றியது. அவளுக்குப் புரிந்தது,
'அம்மா! அம்மா' கதவைப் படீரென்று திறந்து கொண்டே உள்ளே ஒடி, இருளில் அவர்மேல் தடுக்கி விழுந்தாள். அவர் காலைக் கெட்டியாய் மார்போடு தழுவிக் கொண்டாள்.
'அம்மா, அம்மா, நான் உண்டாயிருக்கேம்மாl-'
அம்மா உடல் பூமிபோல் கிடுகிடென்று ஆடிற்று. மரு மகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.
இருளில் அவள் முகத்தின்மேல் இரு இதழ்கள்
உதிர்ந்தன. []