பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உத்தராயணம் ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டு விட்டால் முதலில் உணர்வது தன் தனிமை தான். கியாயமிருக்குமிடம் தெரிந்தும், தான் எடுத்துச் சொன்னால் செல்லாது என்ற தலை குனிவில் அடைத்துப்போன வாய். பாரதயுத்தம் இன்னமும் ஓயவில்லை. நாம் இன்னும் குருகேஷத்ரத்தில்தானிருக்கிறோம். காங்கேயர்கள் (பீஷ்மர்கள்) வீழ்ந்தவர்கள் வீழ்ந்தபடி சாப்படுக்கை அன்று விரித்தது விரித்தபடி.

  • Tommy எங்கிருந்தோ ஒடி வந்து என் முகத்தை ஓரிருதடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை- -

இதுவேதான் என் உத்தராயணமா? துாரத்தில் சிரிப்பு கேட்கிறது. தொகுதி: உத்தராயணம் அஜந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கூந்தல் கொடுப்பனை இருக்காது.