பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 உத்தராயணம் Tommy வாலையாட்டிக் காலை வந்தனம் தெரிவித்துக் கொள்கிறது, எங்கிருந்தோ, என்றோ வந்தது. எங்கோ போகிறது, வருகிறது. திடீரென்று நினைத்துக்கொண்டு கனகாரியமாக ஓடுகிறது. எங்குபோனாலும், வந்தாலும் இரவு இங்குதான். எல்லாம் பகல் பத்துமணிக்கும். இரவு பத்துமணி வாக்கிலும், கிணற்றடியில் வைக்கும் ஒரு கவளம் சோறு பண்ணும் வேலை. "தொதோ’ கூடக் கொட்ட வேண்டாம், எங்கிருந்தாலும் பறந்தோடி வந்து விடுகிறது. சொறி பிடிக்கறது. சொறி உதிர்கிறது. ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை. வாலையாட்டிக்கொண்டு காக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கான் இருக்கிறேன் உனக்கேன் கவலை?’ என்று கண்கள் பேசுகின்றன. 'சனியனே எட்டிப்போ காலைச் சுத்திண்டு!” உதையை வாங்கிக் கொண்டு, குரைக்கக் கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கெனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக் கொள் கிறது. டே, ரொம்பப் பொறுமையா இருக்குடா !” "Yes Yes, முன் ஜன்மத்தில் ஸ்வாமி ஜியா இருந்திருக்கு மோடா?’’ - ஈதெல்லாம் காயைக் குறிப்பிடுவன அல்ல. என் காது கேட்க என்னைக் கேலி பண்ணுகிறார்களாம். தனிப்பட்ட முறையில் அப்பாவை அல்ல, தலைமுறையைத் தலை முறையின் பழிப்பு. எங்களை அவர்கள் பங்கப் படுத்து கிறார்கள். நடுப்பிள்ளை என்னைக் கேட்கிறான்: என்ன அப்பா வாரம் ஒருநாள் மெளன விரதம் என்று வாயைஅடைச்சுட்டு