பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உத்தராயணம் போன்ற ஒரு சத்தம். ஆனால், அதைக் கேட்டதும் ஹரிணி பாதி பேசும் படத்தை மார்பில் கவிழ்த்துக் கொண்டு படுத்த வண்ணமே கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள். உண்மையிலேயே பக்தி சுபாவம் உள்ளவள்தான். அதுவும் இதுபோன்று கோகாமல் புண்ணியம் சம்பாதிப்பதில் பலே கெட்டிக்காரி. காலைக்கும் மதியத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! இங்கேயே தெளித்தாற்போல் எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம் பாளமாக வெடித்திருக்கிறது. தாரதுாரக் கட்டடங் கள் கானலில் நடுங்குகின்றன. இது வரை இரண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக்கொண்டச்சு. கசய்ஞ்சாச்சு, ஆனால் உடல் வாணலியாய்ப் பொரிகிறது" இனிமேல் ஈரம்பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா? அந்தந்த நாளுக்கு அதன் போக்கை நடாத்த தேவதை உண்டோ? உண்டெனில் அவள்தான் இன்றுகாலை எனக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டனளோ? சூரியனிடமிருந்து லகானை வாங்கிக் கொண்டா? பிடுங் கிக் கொண்டா? ரதத்தை அவள்தான் கடத்துகிறாளோ? இவன் பொக்கை வாயை இளித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். ஒரு வேளை, இந்த வேளைக்கு ட்யூட்டி மாறி, தேவதையே வேறோ? நமக்குத்தான் காலடி யில் இடறும் கூழாங் கல்லெல்லாம் சாமியாச்சே! அதனால் தான் வெய்யில் இப்படிக் காய்கிறதோ? இல்லை. நான் தப்பாய் கினைக்கிறேன். காயத்தானே வெய்யிலே. வாழையடியில் ஒரே அமளி, எட்டிப்பார்க்கிறேன்.