பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 உத்தராயணம் விஜயம். வயதுக்கேற்ற புத்தகம்தான். ஆனால் இந்த வேளைக்கு மண்டையில் ஏறுமா? ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் வரும் என்று நினைத்தது போக! தோல்வி காணாத பாண்ட். அடி, வெட்டு, குத்து, சுடு, 007 சட்ட பயமில்லாமல் யாரை வேனுமானாலும் கொல்லலாம். சூப்பர் மேன் பாண்ட். மண்டை இடிக்கிறது, பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றி விட்டுப் போய் விட்டான். ஹரிணி தயவு பண்ணனும். ஆனால் அவள் அயர்ந்து துரங்குகிறாள்! பிற்பகல் வாடைக் காற்று கிளம்பி விட்டது. வாச லுக்கு வெளியே புல் தரையில் சாய்வு நாற்காலியைக் கொணர்ந்து போட்டுக் கொள்கிறேன். வானத்துக்கும் வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்து கொண்டிருக் கிறது. வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்கு வரத்து தொடங்கி விட்டது. மேகங்களின் பவனி. பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக் கட்டுக்கள். ஆட்டத் தில் கையிலிருந்து துள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பது போல, டட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்னணி யில் விதவிதமான பொட்டுகள் வைக்கின்றன. மேற்கு, மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவை யும் பிடிக்கவில்லை. அவிழ்த்துப் போட்ட புடவைகள், வித விதமாய் போர் போராய்க் குவிகின்றன. ஐரிகைகள், கலர் கள், மோஸ்தர்கள் மிளிர்கின்றன். வானத்தின் கவானில் லேசாய் ஒரு தேமல் படர்ந்திருக் கிறது. கிணற்றடியிலிருந்து, வாய் குழறியபடி எங்கேயோ சுட்டிக் காட்டிக்கொண்டு ஹரிணி ஓடி வருகிறாள். பதறிப்