பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 உத்தராயணம் அமுகே என் நெஞ்சை எத்தனை முறை அள்ளியிருக்கிறது! ஆனால் இப்பவோ தோளை வியர்த்தத்தில் தூக்குவதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. வெய்யிலடித்தால், மழை பெய்தால், பாம்பு சட்டையுரித்தால், அசல் வீட்டுக் கோழி இங்கு மேய்ந்தால், Tommy-க்கு என்றேனும் பைத்தியம் பிடித்தால் சைக்கிளைப் போட்டுக் கொண்டு கறிவேப் பிலைக் கொத்துக்குக் காய்கறிக் கடைக்குப் போனால், அங்கு கடைக்காரன் கைவிரித்தால், வழியில் சைக்கிள் பங்க்ச்சர் ஆனால், வேலைக்காரி ஒரு வேளைக்கு வரா விட்டால், சினிமாவுக்குக் கிளம்பிப் போய்ச் சேருவதற்கு முன் படம் ஆரம்பித்து விட்டால், தையல்மெஷின் ரிப்பேர் ஆனால், திடீரென்று மின்சாரம் தோற்று விட்டால், எல்லாம் என் குற்றம்தான். அத்வானம் பிடித்த’பல்லவிக்கு ஈதெல்லாம், இன்னும் சொல்ல விட்டுப்போன தெல்லாம் சரணங்கள் தாம். "மொட்டைமாடியில் காத்து வாங்கலாம்னா படிகிடை யாது. என்ன வீடுகட்டி வாழறோமோ?’’ மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படி யும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம். 'பிராமணன் bar விளையாடற வயசைப்பார்!’ ஹரிணிக்கு ஏணியில் ஏறமுடியாத எரிச்சல். என்றுமே அவளுக்கு எல்லாரைக் காட்டிலும் உசிர் வெல்லம். உடம்பு வேறே தடித்து விட்டது. ஆனால் அவள் பயங்களை மறுப்பதற்கில்லை. இங்கு இயற்கை, தன் ஆட்சியை பட்டண வாசத்தின் தடங்க லின்றிச் செலுத்துகிறது. வீட்டைச் சுற்றி முள்வேலி. பூமி யில் வளைகள், எதிலிருந்து எது வேண்டுமானாலும் வர