பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


@l)千a 字。ff。 43 லாம். என்னைக் கேட்டால்? பூமியென்றிருந்தால், வளை கள், குழிகள், வெடிப்புகள், ஏன் இங்கிருந்து மயிலாப்பூரில் அப்பர் சாமி கோவில் தெரு, பழைய கெ. 30, அடுக்குள் தொட்டி முற்றத்தில் ஐலதாரைவரை சுரங்கமே ஒட வழி யுண்டு. நான் என்ன செய்ய? பாட்டி ஆசையாகப் பேரக்குழந்தைகளுக்கு, வடாம், வற்றல் வறுத்து பொட்டலங் கட்டி அங்கு போட்டால், அந்தப் பக்கம் மேடாயிருந்தால், அந்த மேடு ஒரே சீராய் இந்தப் பக்கம் தாழ இறங்கினால்-எந்த மூஞ்சூரைக் கேட் பேன்? உஷ், வேண்டாம். தமாஷாக்கு அங்கும் லாயக் கில்லை. இங்கும் லாயக்கில்லை! சிரிக்கத் தெரிந்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்? சென்ற மூன்று வருடங்களாக சென்னைக்கும் லண்டன் வெதர் வந்து விட்டது, திடீர் கோபம் திடீர் அழுகை, திடீர் மூக்கைச் சிந்திப் போடு, உடனே சிரி எல்லாம் நம் மாதிரிதான். கெற்றி கொப்புளிக்கிறது. இந்த திடீர் மூட்டம் எப்படி வந்தது? புழுக்கம் எனக்கு மூச்சுத் திணறுகிறது. காற்றின் ஒட்டத்தை ஆகாயப் போலீஸ்காரன் ஹோல்ட் ஆன்' பண்ணிவிட்டு என்ன கேஸ் எழுதுகிறான்? தரையிலிருந்த குப்பை எல்லாம் வாரி, முகத்தில் துரவிக்கொண்டு ஒரு பெருமூச்சுக் கிளம்பி, சுழல் காற்றாக மாறுகிறது. ரஸகுண்டு போல் நீர் கோர்த்துக் கொண்ட மேகங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துச் சீர்குலைகின்றன. ஒன்றிரண்டு பாஷ்பங்கள் கூட மேலே உதிர்கின்றன. வானம் ஒரேயடியாய் இருள்கின்றது, இதோ ஆகாச கங்கை அவிழப் போகிறாள். ஈஸ்விச்சேரை மடக்கிட் வேண்டியது தானா?