பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லர். சி. ரர். 45 அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தங்களுடைய சந்தோஷம் தங்களுக்குச் செலுத்திக் கொள்ளும் முதல் கடமை, மிச்சமெல்லாம் துச்சம் எனப்பாவிக்கும் அவர்கள் தத்துவத்தில் 'எங்கே போகிறாய்? எப்போ வருவாய்?” எனும் கேள்வியே அவர்களுடைய அல்வாத் துண்டில் மயிர் சிக்கினாற் போல். எனக்கும் வயிற்றைக் குமட்டுகிறது. கண்ணன் என் எதிரே நின்று கொண்டிருக்கை யிலேயே, சேகர் அவனைத் தாண்டி அவசரமாகப் போகி றான். Boss அவனுக்கும் சேர்த்துச் சொல்லி விட்டதாக அதனுடைய அர்த்தம். ஆகையால் அவன் தனியாகச் செலவு பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. இப்போ எனக்கு கினைவு வருகிறது. எல்லாம் ஏற் கெனவே நினைப்பிலிருப்பவைதான். படங்கள் திடுக் கென்று எகிறுகின்றன. இப்போ தான் மூன்று வருடங்களுக்கு முன் என் தாய் காலமானாள். நான் வழக்கமாய் வீடு திரும்பும் வேளைக்குச் சற்று நேரம் தப்பி வந்தாலும் வாசற்படியில் வந்து உட்கார்ந்து விடுவாள். 'என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கே?' “ஒன்றுமில்லை. உள்ளே புழுக்கமாயிருந்தது. ஏதோ காத்து சில்லுனு வரதேன்னு...' நானும் பக்கத்தில் அமர்கிறேன். பாஷையே பரிபாஷை. உண்மைக் காரணம் எங்களுக்குத் தெரியும்.ஆனால் வெளிப் படுத்திக் கொள்ளமாட்டோம், உள்ளேயிருந்து குரல்கள் வேணுமென்றே எங்களுக்குக் கேட்கும்படிக் கிசுகிசுக் கின்றன.