பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 உத்தராயணம் 'அம்மாவும் பிள்ளையும் பேசிக்கறா பார்த்தையா?” நாங்கள் எங்கே பேசிக்கிறோம்? எங்களைப் பிணைக் கும் மெளனச் சரடே எங்கள் பேச்சென்றால் காங்கள் ரிறையப் பேசுகிறோம். 'அம்மாவும் பிள்ளையும் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருள்படுத்துவது வேறு, பல்லைக்கடித்துக் கொண்டு கிழங்கள்! அசடுகள்!” அட, இங்கே இன்னொரு செட் கிளம்புகிறதே! சாந்தா, தோள்பட்டையில் மேலாக்கு மடிகளைச் சீண் டிய வண்ணம், அப்பா, கட்டை தொட்டி நாடார் டி. வி. செட் புதுசா வாங்கியிருக்கார். எங்களை வரச்சொன்னார். போயிட்டு வரோம்.' என் புருவங்கள் என்னையுமறியாமல் கேள்வியில் உயர்ந்திருக்க வேண்டும், ஏனெனில், காட்சி முடிந்து திரும்பப் பத்து, பத்திரை ஆகிவிடுமே! தனி வழி, பெண்டு கள், இரவு வேளை... “அதெல்லாம் ஒண்னுமில்லை. -வெடுக்கென் கிறாள். இத்தனைக்கும் கான் வாய் திறக்கவில்லை. ஆனால் சாக்தா இந்த வருடம் 10-1. ஏற்கெனவே கிறைய மார்க்கு வாங்குவாள். ஆகையால் கான் வாய் திறக்கு மளவுக்கு அவள் மக்கு இல்லை. என் வாயை அடைக்கவும் அவளுக்குத் தெரியும். பக்கபலம் வேறு இருக்கிறதே! 'முன் கிலாத்தான். கியூஸ் வரைக்கும் இருக்க மாட்டோம். மெயின் முடிஞ்சவுடனே திரும்பிடறோம். அப்பா, நீங்கள் டி. வி. வாங்கியிருந்தால், பிறத்தியார் வீட்டில் எங்களுக்கென்ன வேலை?"